மத்திய அரசின் அறிவுறுத்தல்படி தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில், 2018-19ம் கல்வியாண்டு முதல் 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை என்றும் தனியார் பள்ளி 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.50 கட்டணம், 8ஆம் வகுப்புக்கு ரூ.100 கட்டணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2 மணி நேரம் நடைபெறும் எனவும் தேர்வுக்கு பின் வினாத்தாளை வட்டாரவள மையங்களில் வைக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment