எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

6 முதல் பிளஸ் 2 வரையுள்ள பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலையான கராத்தே பயிற்சியளிக்க தமிழக அரசு உத்தரவு

Friday, February 22, 2019


6 முதல் பிளஸ் 2 வரையுள்ள பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலையான கராத்தே பயிற்சியளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் '2020ல் நடக்க உள்ள ஒலிம்பிக்கில் கராத்தே போட்டியையும் இணைக்க சர்வதேச கராத்தே சம்மேளனம் பரிந்துரைத்தது.அதன்படி 'ஸ்கேட் போர்டிங் சர்பிங் பேஸ்பால் ஸ்போர்ட் கிளைம்பிங் கராத்தே உள்ளிட்ட ஐந்து போட்டிகளுக்கு ஒலிம்பிக் கமிட்டி அங்கீகாரம் வழங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தமிழக பள்ளிகளில் இந்தாண்டு முதல் கராத்தே விளையாட்டு போட்டிகளை சுயம் சார்ந்த தற்காப்பு கலையாக 6 முதல் பிளஸ் 2 மாணவிகளுக்கு கற்றுத்தர அரசு உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்புராஜ் கூறுகையில் '' தற்காப்பு உத்திகளில் கராத்தேவும் ஒன்று. குறிப்பாக மாணவிகளுக்கு அதனை கற்றுத்தந்து திறனை மேம்படுத்தி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வைக்கப்படுவர்''என்றார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One