உத்தரப்பிரதேசத்தின் பொதுத்தேர்வில் காப்பியடிப்பதில் இருந்து தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து சுமார் 6 லட்சம் மாணவர்கள் தேர்வுகளை புறக்கணித்தனர்.
அந்த மாநிலத்தில் கடந்த 7-ஆம் தேதி தொடங்கி மார்ச் 2-ஆம் தேதி வரை 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 58 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர்.இந்நிலையில், இந்த தேர்வில் கடந்த ஆண்டுகளை போல் மாணவர்கள் காப்பி அடிக்கக் கூடாது என்பதற்காக கடுமையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு சிசிடிவி மட்டும் பொருத்தியதால், தேர்வு கண்காணிப்பாளரே மாணவர்களுக்கு விடையைக் கூறி எழுத வைத்தது நடந்ததால் இந்த ஆண்டு சிசிடிவியுடன் உயர் திறன் கொண்ட ஆடியோ ரெக்கார்டிங் பொருத்தப்பட்டு காப்பியடிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் 9 நாட்கள் நடைபெற்ற தேர்வில் 6 லட்சம் மாணவர்கள் தேர்வை புறக்கணித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பொதுத்தேர்வின் போது முறைகேடுகள் அதிக அளவில் நடப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment