எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அறிவியல் தின விழாவை சிறப்பாக கொண்டாடிய அரசுப்பள்ளி

Thursday, February 28, 2019


அறிவியல் மக்களுக்கானது

மக்கள் அறிவியலுக்கானவர்கள்

கரூர் மாவட்டம், வெள்ளியணை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் *தேசிய அறிவியல் தின விழா* மிகச் சிறப்பாக 27.02.2019 அன்று  கொண்டாடப்பட்டது.

*விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் திரு .சி.தமிழரசன் அவர்கள் தலைமை வகித்தார்.*

* *கரூர் ஜெய்ராம் கல்வி குழுமம் கல்வி ஆலோசகர் திரு.மு.மோகனசுந்தரம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு பள்ளி மாணவர்களுக்கு தேசிய அறிவியல் தினத்தின் முக்கியத்துவத்தையும், சர்.சி.வி ராமன் அறிவியல் கண்டு பிடிப்பான ராமன் விளைவு பற்றி மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்*

*உதவி தலைமை ஆசிரியர் (இடைநிலை) திரு.ஆர்.விஜயகுமார் சிறப்புரை ஆற்றினார்.*

6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான *சர்.சி.வி.ராமன்* குறித்த *பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசு வழங்கினார்.*

மேலும் *கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்பு திறன்களை வெளிக்கொணரும் வகையில் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. நீர் மேலாண்மை, விவசாயத்தில் நீர் சிக்கனம் , இயற்கை உரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாற்றுத்திறனாளி களுக்கான எளிய கருவிகள் , தகவல் தொழில் நுட்பம், எலக்ட்ரிகல் , எலக்ட்ரானிக்ஸ் , மூலிகைத் தாவரங்கள் பயன்கள் சார்ந்த 50க்கும் மேற்பட்ட படைப்புகளை மாணவர்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தினர். சிறந்த 10  படைப்புகள் காட்சிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.*

*100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சர்.சி.வி.ராமன் முகமுடி அணிந்து தேசிய அறிவியல் தினத்தின் முக்கியத்துவத்தை பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தினர்.*

*300க்கும் மேற்பட்ட மாணவர்கள் , ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் தேசிய அறிவியல் தின விழாவில் கலந்துக் கொண்டு , மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்பு திறன்களை   பார்வையிட்டு பெரிதும் பாராட்டினார்கள்.*

*விழாவின் நிறைவாக பட்டதாரி அறிவியல் ஆசிரியர் பெ.தனபால் நன்றி கூற  விழா இனிதே நிறைவுற்றது.*

தேசிய அறிவியல் தின விழாவிற்கு தலைமையேற்ற பள்ளி தலைமை ஆசிரியர், சிறப்பு விருந்தினர், அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்திய இளம் விஞ்ஞானி மாணவர்கள், பார்வையிட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் , பெற்றோர்கள் என அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெவித்துக் கொள்கின்றேன்.






*நமது இலக்கு நோபல் பரிசு பெரும் அளவுக்கு கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களை உருவாக்குவதே ........

கனவு ஆசிரியர் பெ.தனபால்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One