எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனத்துக்கு தடை; 6,279 உபரி ஆசிரியர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண உத்தரவு

Friday, April 12, 2019




தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை சரி செய்யப்படும் வரை புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யக் கூடாது என உயர் நீதிமன்றம்உத்தரவிட்டு உள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6,279 உபரி ஆசிரியர்கள் இருப்பதும், ஆண்டுக்கு ரூ.444 கோடி சம்பளமாக தரப்படுவதும் தெரியவந்துள்ளது.

தூத்துக்குடியில் அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியர் நியமனத்தை அங்கீகரிக்க கல்வித்துறை அதிகாரிகள் மறுத்ததை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த தனி நீதிபதி, ஆசிரியர் நியமனத்தை அங்கீகரிக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரிஉயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மனுதாரர் பணிபுரியும் பள்ளியில் ஏற்கெனவே உபரியாக ஆசிரியர்கள் உள்ளனர். இந்நிலையில் மனுதாரர்புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது பணி நியமனத்தை அங்கீகரிக்கவில்லை என கல்வித்துறை தரப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்து பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தூத்துக்குடி ஆர்சி டயோசிஸ் பள்ளிகளில் 116 உபரி ஆசிரியர்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.அதன்படி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் பள்ளிகள் உட்பட அரசு பள்ளிகளில் 1,079 உபரி ஆசிரியர்களும், அரசு உதவிபெறும் பள்ளிகளில்5,200 உபரி ஆசிரியர்களும் உள்ளனர்.

 இவர்களுக்கு மாதம் ரூ.37 கோடி என ஆண்டுக்குரூ.444 கோடி சம்பளமாக வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாக ஆசிரியர்கள் உபரியாக இருந்தால் புதிதாக ஆசிரியர்களை நியமனம் செய்யக்கூடாது. ஆனால் இதற்கு நேர் மாறாக உபரி ஆசிரியர்கள் இருக்கும் பல பள்ளிகளில் புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களின் நியமனத்தை அங்கீகரிக்கக் கோருவது தொடர்பாக ஏராளமான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.

அரசு உதவிபெறும் சிறுபான்மையில்லா மற்றும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் நலன் மற்றும் மக்களின் வரிப்பணம் வீணாவதைத் தடுக்க கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கிறோம். அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும்.ஒரே நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை நேர் செய்யப்படும் வரை புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யக் கூடாது. அதையும் மீறி மேற்கொள்ளப்படும் புதிய ஆசிரியர் நியமனங்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்கக் கூடாது.

உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை நேர் செய்வதற்காக தங்களது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பிற பள்ளிகளில் உள்ள பணியிடங்களில் அவர்களை நியமிக்கலாம் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஏப்.15-க்கு தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One