எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளி திறக்கும் நாளில் பணியில் சேர உத்தரவு

Saturday, May 25, 2019
தமிழகத்தில், கடந்த டிசம்பரில், நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில், 2,381 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதில், துவக்க பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள், இம்மையங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து, சில ஆசிரியர்கள், உயர் நீதிமன்றத்துக்கு சென்றதால், எல்.கே.ஜி., வகுப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.கடந்த, 22ம் தேதி அளித்த தீர்ப்பில், 'இடைநிலை ஆசிரியர்களை, எல்.கே.ஜி., வகுப்புகளுக்கு நியமித்ததில் தவறில்லை' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், பள்ளி திறக்கும் நாளன்று, அங்கன்வாடி மையங்களில், பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One