எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கூகுள் சயின்ஸ் ஃபேர் குளோபல் போட்டிக்குத் தேர்வாகியுள்ள இந்தியச் சிறுவன்.!

Tuesday, May 28, 2019


தெருவிளக்குகளை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்காக துபாயில் வசிக்கும் 15 வயது இந்திய மாணவன், கூகுளின் கூகுள் சயின்ஸ் ஃபேர் குளோபல் போட்டிக்கு(Google Science Fair global contest) தேர்வாகியுள்ளார். 100 டாப் பிராந்திய இறுதி போட்டியாளர்களின் பட்டியலில் இந்த சிறுவனும் இடம் பிடித்துள்ளார்.


ஷாமில் கரீம் என்ற இந்த பள்ளி மாணவனுக்குச் சென்னை தான் பூர்விகம், துபாயில் உள்ள இந்திய உயர்நிலைப் பள்ளியில் 11 ஆம் கிரேடில் படித்து வருகிறார். கூகுளின் கூகுள் சயின்ஸ் ஃபேர் குளோபல் போட்டியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பதிவுகளிலிருந்து இவர் தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இவர் கண்டுபிடித்துள்ள தெருவிளக்கு திட்டத்தின்படி, ஒரு கார் அல்லது ஒரு நபர் தெருவிளக்கை நெருங்கும் பொழுது, தெருவிளக்கு தானாகப் பிரகாசம் அடையும் அதே போல் அவர் கடந்து வந்த தெருவிளக்கு ஆட்டோமேட்டிக்காக மங்கிவிடும்படி புதிய தொழில்நுட்பத்தை இந்த பள்ளி மாணவர் உருவாக்கியுள்ளார்.

இம்முறையைப் பயன்படுத்தி பெரும் அளவில் மின்சாரம் சேமிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


 அதேபோல் இன்பிராரெட் சென்சார்கள் போல் இல்லாமல் 63% மலிவான செலவில் மின்சாரத்தை இவரின் முறைப்படி சேமிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One