எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

டி.என்.பி.எஸ்.சி., 'ரிசல்ட்' வெளியீடு

Monday, May 27, 2019
அரசு துறைகளில், 15 பதவிகளில் காலியாகவுள்ள, 845 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட, தேர்வுகளின் முடிவுகளை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது.
வனச்சரக அலுவலர், 158; முதுநிலை ரசாயனர், 2; கட்டட கலை உதவியாளர், 13; வேலைவாய்ப்பு துறை உதவி இயக்குனர், 9; உதவி இன்ஜினியர், 32.மாவட்ட கல்வி அதிகாரி, 20; வணிக துறை ஆய்வாளர், பண்டக காப்பாளர், தொல்லியல் துறை நுாலகர் பதவி, தலா, 1; நுாலகர் பதவி, 28 மற்றும் உதவி வேளாண் அலுவலர், 580 என, 15 விதமான பதவிகளில், காலியாக உள்ள, 845 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டன.இந்தத் தேர்வுகளின் முடிவுகளை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், நேர்முக தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியானவர்களின் பட்டியல், www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One