எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள் -07-06-2019

Friday, June 7, 2019


*இன்றைய திருக்குறள்*

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் 
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

*பொருள்*

பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.

*இன்றைய சிந்தனை*

ஒரு மனிதனின் சிறந்த நண்பர்கள் அவனது பத்து விரல்களே!!!

A man's best friend is his 10 fingers only.

*Important Daily Used Words*

✳Vaccinator - தடுப்பூசி போடுபவர்

✳Washerman - துணி சலவை செய்பவர்

✳ Washer Women - துணி சலவை செய்பவள்

✳Watchman - காவலாளி

✳Waterman - தண்ணீர்காரர்

*Today's grammar*

*Nouns* : பெயர்சொற்கள்
பெயர்ச்சொற்களை ஆங்கிலத்தில் "nouns” என அழைக்கப்படுகிறது. இச்சொல் இலத்தீன் மொழியில் "nōmen" (பெயர்) என்ற சொல்லில் இருந்து மருவி ஆங்கிலத்தில் பயன்படும் சொல்லாகும்.

ஆங்கிலப் பெயர்சொற்கள் (Nouns) என்பன மனிதர்கள், இடங்கள், பொருற்கள், உயிரினங்கள், உணர்வுகள் போன்றவற்றை குறிப்பதற்கான "பெயர்கள்" அல்லது "பெயர்ச்சொற்கள்" ஆகும்.

இப்பெயர்சொற்களை ஆங்கிலத்தில் பல்வேறு பிரிவுகளாக பிரித்துள்ளனர். அவைகளாவன:

Common Nouns 

Proper Nouns 

Countable Nouns

Uncountable Nouns 

Collective Nouns 

Concrete Nouns 

Abstract Nouns 

Compound Noun

*இன்றைய மூலிகை*

வேம்பு

கிருமிநாசினி, குளிர்ச்சிதரும், வயிற்றுப் பூச்சிகளை நீக்கும்.

*புகழ்பெற்ற நூல்கள், நூலாசிரியர்கள்*

*பாரதியார்*

*நூல்கள்*:

குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, பாப்பாபாட்டு, பாஞ்சாலிசபதம், ஞானரதம், அக்னி குஞ்சு, பூலோக ரம்பை, சந்திரிகையின் கதை, புதியஆத்திச்சூடி, சீட்டுக் கவி .

*இன்றைய கதை*

*கைமேல் பலன் கிடைத்தது*

 அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவனாக இருந்தான். அரண்மணை ஜோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர்க்காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் ஜோதிடர் அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும் என்றார். மன்னன் சேவகனை அழைத்து காலையில் எங்கேயாவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் சொல் என்று கட்டளையிட்டான். சேவகன் தினமும் பொழுது விடியும் முன்பே தெருவிற்கு சென்றுவிடுவான். 

 ஒரு நாள் அரண்மனைக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சியுடன் மன்னரிடம் சென்று விபரம் சொன்னான். இதைக் கேட்ட மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு சென்றான். அதற்குள் ஒரு காக்கை போய்விட்டது. மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு என்று உத்தரவிட்டான். 

 சேவகன் சிரிக்க ஆரம்பித்தான். மன்னனுக்கு கோபம் அதிகமானது. ஏன் சிரிக்கிறாய் என்று சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி என்று உறுமினான். சேவகன் சொன்னான். மகா மன்னரே! இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா? என்றான். மன்னருக்கு அப்போதுதான் சகுனம் பார்ப்பது தவறு என்று உரைத்தது. 

*🧾செய்திச் சுருக்கம்*

✳ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் ஓட்டுனர் உரிமம் ஏன் ரத்து செய்யக்கூடாது உயர்நீதிமன்றம் கேள்வி.

✳இனி தமிழகத்தில் 24 மணி நேரம் கடைகள் திறந்திருக்கலாம். தமிழக அரசு அனுமதி

✳நிபா வைரஸ் பரவுவதை தடுக்க கேரளா எல்லையில் பலத்த சோதனை, தமிழக அரசு நடவடிக்கை.

✳அமெரிக்காவுடனான வர்த்தக போருக்கு மத்தியில் 5ஜி சேவை தொடங்க அனுமதி அளித்தது சீனா.

✳மருத்துவ படிப்புகளில் சேர 07-06-2019 முதல் விண்ணப்பிக்கலாம். அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு.

✳கேரளாவில் தென்மேற்கு பருவ மழை ஜூன் 8 ஆம் தேதி தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

*தொகுப்பு*
🍀☘🎋🌿🍂🍀☘
T.தென்னரசு, ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர்.
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One