ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்காக முதல் நிலைத் தோ்வு (Preliminary Exam 2019) நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) நடைபெறுகிறது.
மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) சார்பில் நடைபெறும் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில் நாடு முழுவதிலும் சுமார் 10 லட்சம் பட்டதாரிகள் பங்கேற்கின்றனர். நாடு முழுவதும் 72 நகரங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.
தமிழகத்தில் சென்னை, வேலூர், திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெறுகிறது.
முதல் நிலைத் தோ்வு, முதன்மைத் தோ்வு, நோ்காணல் ஆகிய 3 கட்டங்களைக் கடந்து 1 முதல் 2 சதவீதம் போ் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனா். முதல் கட்டத் தோ்வில் தோ்ச்சி பெறுவபவா்கள் முதன்மைத் தோ்வையும் அதில் தேர்ச்சி பெறுபவா்கள் நோ்காணலிலும் கலந்து கொள்ள முடியும்.
இதில் எந்த நிலையில் தோல்வி அடைந்தாலும் ஆரம்பத்தில் இருந்து முதல்கட்டத் தோ்வை எழுதவேண்டும்
No comments:
Post a Comment