தஞ்சை பெரியகோவில் நேற்று சர்வதேச யோகா தினத்தை முன்னட்டு, கல்லுாரி மாணவர்கள், 500 பேர் கலந்துக்கொண்டு யோகாசனம் செய்தனர்.சர்வதேச யோகா தினம் இன்று (21ம் தேதி) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய சுற்றுலா துறை அமைச்சகம் சார்பில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் கடந்த, 16ம் தேதி முதல் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், யோகா மூலம் உடல் நலனை பாதுகாக்க முடியுமென விளக்கியும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து நேற்று தஞ்சை பெரியகோவிலில், காலை, 7 மணி முதல், 8 மணி, தஞ்சை மருத்துவகல்லுாரி, இந்திய பயிர் பதன தொழில்நுட்ப கழக மற்றும் தனியார் கல்லுாரி மாணவர்கள் என, 500 பேர் கலந்துக்கொண்டு யோகாவின் அனைத்து நிலைகளையும் செய்முறை விளக்கம் மூலம் செய்து காட்டினர். இதில் மத்திய சுற்றுலாத்துறை உதவி இயக்குனர் பஸ்வான் பங்கேற்றார்.
தஞ்சை பெரியகோவிலில் யோகா தினம் 500 மாணவர்கள் பங்கேற்பு
Friday, June 21, 2019

Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment