சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு,திருச்சியில் ஆயிரத்து 800 மாணவ, மாணவிகள் இந்திய வரைபடம் வடிவில் நின்று யோகாசனங்களை நிகழ்த்தி சாதனை படைத்தனர்.
சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே திருச்சி சௌடாம்பிகா கல்விக்குழுமம் சார்பில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சியில் ஆயிரத்து 800 மாணவ, மாணவிகள் இந்திய வரைபட வடிவில் நின்று 21 ஆசனங்களை 20 நிமிடங்களில் செய்து அசத்தினார். இந்த யோகாசன நிகழ்வானது யோகாசனத்திற்கான பிரத்யேக சாதனை புத்தகமான பதஞ்சலி உலக சாதனை புத்தகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் சாதனைக்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment