எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தமிழக அரசு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், விரைவில் போராட்டம்

Monday, June 17, 2019




நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், தமிழ்நாடு ஆசிரியர் மன்றத்தின் சார்பில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கைதாகி சிறைசென்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு பாராட்டு விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சங்கத்தின் பொதுச்செயலாளர் மீனாட்சிசுந்தரம் பங்கேற்று பேசினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி:

 தமிழ்நாட்டில் பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என்ற தவறான தகவலை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிடுகிறார். கடும் கோடை காரணமாக, ஒருவாரம் கழித்து பள்ளிகளை திறக்க கேட்டுக்கொண்டோம்.


 ஆசிரியர்களை பழிவாங்குவதாக நினைத்து உடனே பள்ளிகளை திறந்தார்கள். இதனால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுவரையில் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை.


 ஓய்வுபெறும் நாளில், அரசு ஊழியர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது.


போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம், ஊதிய உயர்வு ரத்து, பணி உயர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.


 தமிழக அரசு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், விரைவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One