தவறாகப் பயன்படுத்தினால், சட்டரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்' எனப் பயனாளர்களை வாட்ஸ்அப் எச்சரித்துள்ளது.
ஃபேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்கள் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிவருகின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பின் வெற்றிக்கு ஃபேஸ்புக் உதவியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், இந்திய பொதுத்தேர்தலில் ஃபேஸ்புக்கில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதேதான் வாட்ஸ் அப்பிலும்... 5 பேருக்கு மேல் ஒரு செய்தியை ஃபார்வர்டு செய்ய முடியாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளை மீறி, நடந்துமுடிந்த மக்களவை பொதுத்தேர்தலில் வாக்காளர்களைக் கவர வாட்ஸ்அப் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வாட்ஸ்அப் குளோன் மற்றும் சாஃப்ட்வேர் மூலமாக இந்திய டிஜிட்டல் சந்தையாளர்களும் அரசியல்வாதிகளும் தவறான செய்திகளைப் பயனாளர்களுக்கு மொத்தமாக அனுப்பியுள்ளனர். ஸ்பேம் வாட்ஸ்அப்பின் ஒரு முக்கியப் பிரச்னை. குறிப்பாக, இந்தியாவில் 200 மில்லியன் பயனர்கள் வாட்ஸ்அப்பில் இருக்கிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி, முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனைச் செய்வபவர்களை வாட்ஸ்அப் நிறுவனம் கடுமையாக எச்சரித்துள்ளது. 'வாட்ஸ்அப்பை தவறாகப் பயன்படுத்தினால், பொதுமக்கள் சொல்லும் புகாரைப் பொறுத்து, சட்டரீதியாக நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்' எனப் பயனாளர்களை எச்சரித்துள்ளது.
No comments:
Post a Comment