தர்மபுரி அரசு பொறியியல் கல்லுாரியில் நேற்று துவங்கிய, இன்ஜி., கலந்தாய்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியை, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆய்வு செய்தார்.பின், அவர் கூறியதாவது: பொறியியல் கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்கியுள்ளது. தமிழகம் முழுவதும், 46 சேவை மையங்களில், இப்பணி நடந்து வருகிறது.
இதில், விளையாட்டு வீரர்களுக்கு என, தனி சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 1.42 லட்சம் இடங்கள் உள்ளன. தவிர, தனியார் கல்லுாரிகளிடம் இருந்து, 30 ஆயிரம் இடங்கள், அரசு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்தாண்டு மட்டும், 1.72 லட்சம் இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை நடக்கவுள்ளது. கலந்தாய்வின் போது, மாணவர்களுக்கு எத்தனை கல்லுாரிகள் வேண்டுமானாலும் தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு பணி, அடுத்த ஏழு நாட்களுக்கு தொடர்ந்து நடக்க உள்ளது. உயர்கல்வித் துறையில், யார் தவறு செய்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment