அரசு பள்ளிகளில் சென்ற ஆண்டு படித்த மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில்,இந்த ஆண்டு சத்துணவு வழங்கப்படுவதால் - ஜூன் மாதத்தில் புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் வரை சத்துணவு வழங்கப்படுவதில்லை.. குழந்தைகள் பள்ளியில் சேரும் நாள் முதலே அவர்களுக்கு சத்துணவு, முட்டைவழங்க கோரிக்கை ..
வணக்கம், அரசு பள்ளிகளில் ஜூன் மாதத்தில் மாணவர்கள் பள்ளியில் சேர்கின்றனர்.. அனால் பள்ளிகளில் சத்துணவு வழங்குவதற்கான மாணவர்கள் எண்ணிக்கை சரி பார்த்தல் பணி டிசம்பர் மாதத்தில் தான் நடைபெறுகிறது... ஜூன் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை கடந்த ஆண்டு பள்ளியில் பயின்ற மாணவர்கள் எண்ணிக்கையை வைத்து சத்துணவு வழங்குவதால், புதிதாக ஜூன் மாதத்தில் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு மேலாக சத்துணவு வழங்கபடுவதில்லை.. இதனால் அரசு பள்ளியில் புதிதாக சேர்க்கப்படும் குழந்தைகள் ஆறு மாதங்கள் பட்டினி கிடக்கும் சூழல் உருவாகிறது.. (ஒரு குறிப்பிட்ட அரசு பள்ளியில் 2017-2018 கல்வியாண்டில் 5 மாணவர்கள் இருந்தனர், 2018-2019 கல்வியாண்டில் 20 மாணவர்கள் புதிதாக பள்ளியில் சேர்க்கப்பட்டு மாணவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது.. அனால் புதிதாக சேர்க்கப்பட்ட 20 மாணவர்களுக்கு ஜூன் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை சத்துணவு வழங்கப்படவில்லை)... இதனை உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு அரசு பள்ளியில் குழந்தைகள் பள்ளியில் சேரும் நாள் முதலே அவர்களுக்கு சத்துணவு, முட்டை ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பணிவோடு கேட்டுகொள்கிறேன்... நன்றி
No comments:
Post a Comment