எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.07.19

Monday, July 15, 2019


திருக்குறள்


அதிகாரம்:புகழ்

திருக்குறள்:238

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.

விளக்கம்:

தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும்.

பழமொழி

போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்

Let by gones by gones.

இரண்டொழுக்க பண்புகள்

1. கடிதங்கள், கட்டுரைகள் போன்றவை எழுதும் போது திருத்தமான மொழி நடையை கையாள்வேன்.

2. பொம்மலாட்டம், தெருக்கூத்து போன்ற நாட்டுப்புற கலைகளையும் கலைஞர்களையும் போற்றுவேன்.

பொன்மொழி

உலகின் அடிப்படைத்  தத்துவம் எல்லாம் ஒரு வினையின் தீர்வாகவே இருக்கும்.தீர்வுகள் சில சந்தர்ப்பங்களில் மாற்றம் பெறுகிறது...  ...... சாக்ரடீஸ்

பொது அறிவு

1. நமது நாட்டில் முதலில் அமைக்கப்பட்ட மாநிலம் எது?

உத்தரப் பிரதேசம்

2. முதன்முதலில் மின்சார வசதி பெற்ற இந்திய நகரம் எது ?

கொல்கத்தா (1899 ஆம் ஆண்டு)

English words & meanings

* Ant - எறும்பு. சுறுசுறுப்பானது. கூடி வாழும். அது கடித்தால் வலிக்க காரணம் ஃபார்மிக் அமிலம்.

* Almond - பாதாம் பருப்பு. கொழுப்பை குறைக்கும். வைட்டமின் E சத்து உள்ளது. இதன் பிறப்பிடம் ஈரான்.


ஆரோக்ய வாழ்வு

மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் தோல் சிறுகுடல் குடல் மற்றும் மார்பக புற்றுநோய் வராமல் நம்மை பாதுகாக்கும்.

Some important  abbreviations for students

* FSC - Fundamental of Science

* SPV - Special Purpose Vehicle

நீதிக்கதை

ஒரு குருவும் அவருடைய சீடர்களுடம் ஆற்றங்கரையோரம் கலகலப்பாகப் பேசிக்கொண்டே சென்றனர்.

ஒரு சீடன் கேட்டான், ‘குருவே, பூர்வாசிரமத்தில் நீங்கள் ஒரு பெரிய போர் வீரராக இருந்ததாகவும், பல நாடுகளுக்குப் பயணம் செய்து வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்ததாகவும் மூத்த சீடர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்… நிஜம்தானா?’

‘நிஜம்தான்.. ஆனால் அதெல்லாம்  அந்தக் காலம். இப்போது நான் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டேன்…!’ என்றார் குரு.

‘ஏன் குருவே? போர் தவறா… ஆயுதங்களே வேண்டாமா?’

‘சரி தவறு என்பதல்ல என் வாதம்… ஒரு கட்டத்துக்குமேல் புத்திக் கூர்மையும் அமைதியையும் விட சிறந்த ஆயுதம் எதுவும் இல்லை என்று புரிந்துவிட்டது எனக்கு!”

குருவின் வார்த்தைகளில் சீடர்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. அவரை சோதித்துப் பார்த்துவிட முடிவு செய்து, ஒரு திட்டம் போட்டனர்.

‘நாளை குரு தியானத்தில் இருக்கும்போது, நாம் இருவரும் மறைந்திருந்து அவரைத் தாக்குவோம். அப்போது அவர் ஆயுதங்களை எடுக்காமல் நம்மை எப்படிச் சமாளிக்கிறார் என்று பார்ப்போம்,’ என்று முடிவு செய்தனர்.

மறுநாள் வகுப்புகள் முடிந்ததும், குரு வழக்கம்போல தியானத்தில் ஆழந்துவிட, இந்த இரு சீடர்கள் மட்டும் ஓலை தட்டிகளுக்கு அப்பால் மறைந்து கொண்டனர்.

சில நிமிடங்கள் கழித்து இருவரும் மெல்ல வெளியில் வந்தனர். பேசி வைத்தபடி இருவரும் குருவின் மீது ஏக காலத்தில் இரு பக்கமிருந்தும் பாய்ந்தனர்.

குரு முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவர்கள் பக்கத்தில் நெருங்கும்வரை கண்மூடி அமைதியாக இருந்த குரு, கடைசி விநாடியில் சற்று முன்னே வந்து குனிந்துகொண்டார். சீடர்கள் இருவரும் மடேர் என்று மோதிக் கொண்டு தரையில் விழுந்து உருண்டனர்.




எதுவும் நடக்காததுபோல் தியானத்தைத் தொடர்ந்தார் குரு!

குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன் இல்லை என்பதையும் அறிவுக்கு மிஞ்சிய ஆயுதம் இல்லை என்பதையும் அவர்கள் புரிந்து கொண்டார்கள்"


திங்கள்

தமிழ் & பாடல்

தூய தமிழ் சொற்கள் அறிவோம்

 சகஜம்  - வழக்கம்
சகோதரி -  உடன்பிறந்தவள்
சங்கடம்  - இக்கட்டு, தொல்லை
சங்கதி  - செய்தி

பாடல்

பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளில் அரசுப் பள்ளி ஆசிரியையின் அழகிய குரலில் கர்மவீரருக்கு ஒரு பாமாலை.

கல்வி வளர்ச்சி நாள் பாடல் - 15.07.19


இன்றைய செய்திகள்

15.07.2019

* பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை பயன்படுத்தாத ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

* முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வுக்கு பதிலாக நெக்ஸ்ட் தேர்வை நடத்த மத்திய அரசு திட்டம்.




* நாளை விண்ணில் ஏவப்பட உள்ள சந்திரயான்-2 விண்கலத்துக்கான கவுண்டவுன் தொடங்கியது.

* விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில், ரோமானியா வீராங்கனை சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டம் வென்றார்.

* உலகக்கோப்பை கிரிக்கெட்: விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து உலக கோப்பையை வென்றது.

Today's Headlines

🌸 The Department of Education has announced that departmental action will be taken against teachers who do not use the biometric attendance record.

 🌸 Central Government planned for NEXT Examination instead of NEET for the post graduation in medicine

 🌸Countdown to the launch of Chandrayaan-2 spacecraft  started which is to be launched tomorrow.

 🌸Romanian player Simona Halep won the Wimbledon Grand Slam singles  in tennis

 🌸 World Cup Cricket: In a very interesting and terrific final match England beat Newzealand and won the cricket world cup for the first time.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One