எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

School Morning Prayer -18-07-2019

Wednesday, July 17, 2019
*இன்றைய திருக்குறள்*

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
 மாட்சியின் மாசற்றார் கோள்.

*மு.வ உரை*:
பிறர் விரும்பும் படியாகத் தாம் சொல்லின் பிறர் சொல்லும் போது அச் சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும்.

*கருணாநிதி  உரை*:
மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துக்களைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும்.

*சாலமன் பாப்பையா உரை*:
பிறரிடம் பேசும்போது அவர் திரும்பவும் நம் பேச்சைக் கேட்க விரும்புமாறு பேச்சு; மற்றவர் பேச்சைக் கேட்கும் போது அவரது சொற்குற்றம் பரவாமல் பொருளை மட்டுமே பார்க்க; இதுவே மனக்குற்றம் அற்றவர்களின் சிறந்த கொள்கை.

*பொன்மொழி*
நூறு அறிவாளிகளுடன் மோதுவதை விட, ஒரு மூடனோடு மோதுவது மிகச் சிரமமானது.

   - தந்தை பெரியார்.


*பழமொழி*

In a fiddler’s house all are dancers.

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்.


*Today's grammar*

*Auxiliary verbs*

Basically, auxiliary verbs are function words, a type of closed class which is constituted of words that have a grammatical function as opposed to content words, which are an open class of lexical words. An auxiliary verb is used to add functional or grammatical content to the information expressed by another verb, considered to be the main verb. Auxiliary verbs are also called helping verbs

Examples:
I am writing a book.

He has done the work.

We will be there in a minute.

Would you help me
 with this homework?

Can you open the door?

Did you visit New York last holiday?

Do you like chocolate?

They must get there on time.*அறிவோம் தமிழ்*

*வாக்கிய வகைகள்*

*செய்வினை*

எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைதல் வேண்டும்.
செயப்படுபொருளோடு ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபைச் சேர்க்க வேண்டும்.
(ஐ-உருபு மறைந்தும், வெளிப்பட்டும் வரும்).


*Important  Used Words*

 Phial கண்ணாடி குப்பி

 Nutcracker பாக்கு வெட்டி

 Soap சோப்பு

 Casket அலங்காரப் பெட்டி

 Needle ஊசி

*பொது அறிவு*

1. மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடுஎது?
                                 *தென்னாப்பிரிக்கா*

2. உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொடி கொண்ட நாடு எது??
                                    *டென்மார்க்*

3.கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது ?
                                     *இங்கிலாந்து*

4.காவல் துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது
                                    *பிரிட்டன்*


*இன்றைய கதை*

*புத்திசாலி அம்மா*

 ஓர் ஊரில் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அவள் கணவன் வெளியூரில் வேலை செய்து கொண்டிருந்தான்.

 பல நாட்களுக்குப் பிறகு கணவனிடமிருந்து நீயும் குழந்தைகளும் இங்கு வந்து சேருங்கள் என்ற கடிதம் வந்தது. தன் குழந்தைகளுடன் மாட்டு வண்டியில் ஊருக்கு புறப்பட்டாள் போகும் வழியில் அடர்ந்த காட்டு வழியாக வண்டி சென்றது ஆபத்து வரப்போவதை அறிந்த மாடுகள் கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது.

 நடுக்காட்டில் குழந்தைகளுடன் சிக்கிக்கொண்ட அவள் இங்கே புலி இருக்குமே என்று நடுங்கினாள். அருகிலிருந்த மரத்தின் கிளையில் குழந்தைகளுடன் அமர்ந்து கொண்டாள்.

 சிறிது நேரத்தில் அங்கு புலி ஒன்று வருவதை பார்த்த அவள் அதனிடமிருந்து தப்பிப்பதற்காக இரண்டு குழந்தைகளின் தொடையிலும் அழுத்திக் கிள்ளி இருவரையும் அழ வைத்தாள். பின் குழந்தைகளே! அழாதீர்கள் இப்படி நீங்கள் அடம் பிடித்தால் நான் என்ன செய்வேன்.

 நீங்கள் உண்பதற்கு ஆளுக்கொரு புலி பிடித்துக்கொடுத்தேன். இன்றும் அதே போல ஆளுக்கொரு புலி வேண்டும் என்கிறீர்களே. இந்தக் காட்டில் புலி இருக்கும். இன்று மாலைக்குள் நீங்கள் சாப்பிட ஆளுக்கொரு புலி தருகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள் என்று உரத்த குரலில் சொன்னாள்.

 இதைக்கேட்ட புலி நடுங்கி ஒரே பாய்ச்சலாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. பயந்து ஓடும் புலியை வழியில் பார்த்த நரி காட்டுக்கு அரசே! ஏன் இப்படி ஓடுகிறீர்கள்? என்ன நடந்தது என்று கேட்டது.

 நரியே! நம் காட்டுக்கு ஒரு அரக்கி வந்துள்ளாள். இரண்டு குழந்தைகள் அவளிடம் உள்ளன. அந்தக் குழந்தைகள் உண்ண நாள்தோறும் ஆளுக்கொரு புலியைத் தருகிறாளாம். அதை கேட்டுத்தான் நான் ஓடிவந்தேன் என்றது.

 இதைக் கேட்ட நரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவள் உங்களை ஏமாற்றி இருக்கிறாள். எங்கேயாவது மனிதக் குழந்தைகள் புலியைத் தின்னுமா? வாருங்கள் அவளையும் குழந்தைகளையும் கொன்று தின்போம் என்றது நரி. நான் அங்கு வர மாட்டேன் என்று உறுதியுடன் சொன்னது புலி.

 அவள் சாதாரண பெண்தான். நீங்கள் நம்பவில்லை என்றால் உங்கள் வாலையும் என் வாலையும் சேர்த்து முடிச்சுப் போடுவோம். பிறகு இருவரும் அங்கே சென்று பார்ப்போம். நம் இருவர் பசியும் தீர்ந்து விடும் என்றது நரி. நரி முன்னால் நடந்தது. புலி தயங்கித் தயங்கிப் பின்னால் வந்தது.

 மரத்தில் இருந்த அவள் நரியின் வாலும் புலியின் வாலும் ஒன்றாகக் கட்டிருப்பதை பார்த்து என்ன நடந்திருக்கும் என்பதை உணர்ந்தாள். கோபமான குரலில் நரியே! நான் உன்னிடம் என் குழந்தைகளுக்கு இரண்டு புலிகளை இழுத்து வரச்சொன்னால் நீ ஒரே ஒரு புலியுடன் வருகிறாய் எங்களை ஏமாற்ற நினைக்கிறாயா? புலியுடன் உன்னையும் கொன்று தின்கிறேன் என்று கத்தினாள்.

 புலி பயந்துபோனது நரியோ புலியாரே! அவள் நம்மை ஏமாற்றுவதற்காக இப்படிப் பேசுகிறாள் என்றது. நரியே என்னை ஏமாற்றி கூட்டிவந்து விட்டாயே என்று புலி திட்டியது. அதன்பிறகு வாலில் கட்டப்பட்டு இருந்த நரியை இழுத்துக்கொண்டு ஓடத்தொடங்கியது.

 வாலில் கட்டப்பட்டிருந்த நரி பாறைஇ மரம் முள்செடி போன்றவற்றில் மோதி படுகாயம் ஆனது. புலியோ எதைப் பற்றியும் சிந்திக்காமல் நரியை இழுத்துக்கொண்டு ஓடியது. வழியில் நரியின் வால் அறுந்து மயக்கம் அடைந்து விழுந்தது. புலி எங்கோ ஓடியே போனது. பிறகு அந்தப் பெண் தன் குழந்தைகளுடன் பாதுகாப்பாகக் கணவனின் ஊருக்குச் சென்றாள்.

*நீதி* :
எந்த ஒரு நிலையிலும் தைரியத்தை கைவிடக்கூடாது.


*செய்திச் சுருக்கம்*

🔮சந்திராயன்-2 விண்கலம் ஜூலை 21 அல்லது 22ம் தேதி ஏவப்படலாம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்.

🔮  தமிழ்நாடு அரசு, ஆசிரியர்களுக்காக புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. (https://tntp.tnschools.gov.in/lms )

🔮இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்கும்படி பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

🔮கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கனஅடி தண்ணீர் திறப்பு.

🔮உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்து பில்கேட்ஸ் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்

🔮மே.இ. தீவுகளில் இந்திய ஏ அணி அசத்தல்: ஒருநாள் தொடரை வென்றது!

*தொகுப்பு*

T.தென்னரசு,
இ.ஆசிரியர்,
TN டிஜிட்டல் டீம்,
திருவள்ளூர் மாவட்டம்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One