எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

8,179 அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளில், பயோ மெட்ரிக் வருகை பதிவு விரிவு

Thursday, July 25, 2019




தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளிலும் பயோ மெட்ரிக் வருகை பதிவு அமல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில்  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வருகையை உறுதிசெய்ய, பயோ மெட்ரிக் வருகைப்பதிவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது அமல் படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மாநிலம் முழுவதும் உள்ள 8,179 அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளில், பயோ மெட்ரிக் வருகை பதிவு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்காக 413 வட்டார கல்வி அலுவலர்களுக்கு, கூரியர் மூலம் பயோமெட்ரிக் கருவிகள் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, இதனை பொருத்துவது குறித்தும், செயல்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்தும் பயிற்சியளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போது வழங்கப்படும் கருவிகளுக்கு, வட்டார கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளில், கணினி இயக்க தெரிந்த பணியாளர்களை தேர்ந்தெடுத்து, அவர்கள் மூலமாக பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிற்சி முடித்தவர்கள் ஏதேனும் ஓரிரு பள்ளிகளில் மட்டுமே பயோ மெட்ரிக் பொருத்த உதவிபுரிவார்கள் இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One