மதுரை அருகே கிராமப்புற மாணவர்களை விமானத்தில் கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்து சென்று அரசுப்பள்ளி ஒன்று ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து மதுரை அருகே பொட்டப்பனையூர் கிராமத்தில் இந்த ஊராட்சி ஒன்றிய கிராமப் பள்ளி இயங்கி வருகிறது. மேலும் ஆரம்பத்தில் 28 மாணவர்களுடன் தொடங்கிய பள்ளியில் தற்போது 70 பேர் படிக்கிறார்கள். இதை தொடர்ந்து இங்கு தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்போடு நடத்தப்பட்ட திறனறி தேர்வுகளில் வெற்றிப்பெற்ற 10 பேர் தேர்வு செய்யப்பட்டு கல்விச்சுற்றுலாவாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இதனையடுத்து விமானம் மூலம் அவர்கள் அழைத்து வரப்பட்டது மாணவர்களையும், பெற்றோர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனை தொடர்ந்து யோகாசனம், மருத்துவ கண்காட்சி, புத்தக கண்காட்சிகளுக்கு அழைத்து செல்வது என அவர்களின் பாதைகளை விரிவடைய செய்யும் இந்த பள்ளி பட்டிமன்றங்கள் மூலம் பேச்சுத் திறமையை ஊக்குவிக்கிறது. மேலும் மதுவிலக்கு பிரட்சாரத்தில் ஈடுபடுத்தி சமூக செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது. மேலும் ஸ்மார்ட் வகுப்பு மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதால் எளிதில் மாணவர்கள் புரிந்துகொண்டு உற்சாகத்தோடு பயில்வதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அங்கு பயிலும் மாணவி ஒருவர் கூறியதாவது, வெற்றிப்பெற்றவர்களை தொண்டு நிறுவனத்தின் மூலம் புத்தக கண்காட்சி, காந்தி மண்டபம், சிலைகள் அமைவிடம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்றதாகவும், மேலும் இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

No comments:
Post a Comment