திருநெல்வேலி மாவட்டம் கடையம் சரகம் சிவஞானபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று கல்விச்சீர் வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவிற்கு கடையம் வட்டார கல்வி அலுவலர் ஜான் பிரிட்டோ அவர்கள் தலைமையில் நடைபெற்றது விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியை உமா குரூப்ஸ் காயா வரவேற்றார்.பள்ளிக்கு கணினி மற்றும் கல்வி உபகரணங்கள்
நாற்காலி
காலணிகள் ஆகியவற்றை ஊர் மக்கள் வழங்கினர்...
இவ்விழாவில் பணிநிறைவு உதவி தொடக்க கல்வி அலுவலர் முருகன் மீனாட்சிபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியை தங்கலட்சுமி செக்கடியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியை குமாரி மந்தியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கோபிநாதன் மற்றும் ஊர்த்தலைவர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




No comments:
Post a Comment