தொடர் மழை காரணமாக கோவை மாவட்டத்தை தொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி,
விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்
தொடர் மழை காரணமாக கோவை மாவட்டத்தை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு
விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா இன்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 'தாழ்வான பகுதிகளில் மக்களை வெளியேற்றி வருகிறோம். சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளதால் வீடுகளை விட்டு மக்கள் வெளியேவர வேண்டாம். மீட்புபணிக்காக பேரிடர் மீட்புக் குழுவினர் இன்று மாவட்டத்திற்கு வரவுள்ளனர்' என்றும் மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா கூறியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று வெள்ளிக்கிழமை விடுமுறையை அறிவித்தார் கோவை மாவட்ட ஆட்சியர்.
கோவை மாவட்டத்தில் தற்போது தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்கிறது. இந்நிலையில், கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.
திருப்பூர்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக திருப்பூர்மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால்பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைஅளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கோவை , நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment