எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அண்ணாவிருது

Saturday, August 24, 2019


 காஞ்சி முத்தமிழ்ச்  சங்கத்தின் முத்தமிழ் மையம் வழங்கும்...

 "அண்ணா விருதும் ஆய்வுக் கட்டுரையும்" விழா மிகச் சிறப்பாக அண்ணா பிறந்த மண்ணில் காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் தங்களையும் இணைத்துக்கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

 அண்ணா விருதும் ஆய்வுக் கட்டுரையும்
********
தமிழ் உணர்வுள்ள தமிழ் அறிஞர் பெருமக்களே
உங்கள் அனைவருக்கும்.
என் இனிய தமிழ் வணக்கத்தை மகிழ்வுடன்  தெரிவித்துக்கொள்கிறேன்.
காஞ்சி முத்தமிழ்ச்  சங்கத்தின் முத்தமிழ் மையம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு விருதுகளை வழங்கி  ஆசிரியர்கள் மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் என ஆயிரக்கணக்கானோரை பெருமைப் படுத்தியும் ஊக்கப்படுத்தியும் வருவது உங்களுக்கு அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

இவ்வாண்டு பெரும் விழாவாக அப்துல் கலாம் ஐயா நினைவிடத்தில் "கலாம் உலக சாதனை விழாவில் கலாம் ஐயா பெயரில் பல்வேறு  விருதுகளை" வழங்கி தமிழகமே வியக்கும் வண்ணம் மாபெரும் உலக சாதனை வெற்றி விழாவை நம் காஞ்சி முத்தமிழ் மையம்  நிகழ்த்தி மாபெரும் சாதனை படைத்தது  இதனைத்தொடர்ந்து

அண்ணாவிருது
****
#அண்ணா பிறந்த மண்ணில்
#அண்ணா பிறந்தநாளில்
#அண்ணா திறந்து வைத்தப் பள்ளியில்
#அண்ணா விருது.
புதுமையாய் *புதுப்பித்து புதுவிழா
பேரறிஞர் அண்ணாவின் 111 வது பிறந்தநாள் கொண்டாட்டம்
மாண்புமிகு கே.ஏ.செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் நம் காஞ்சி முத்தமிழ்  மையம் மூலம் #தத்தெடுத்து புதுப்பித்துள்ள காஞ்சிபுரம்  கோனேரிக்குப்பம் #அரசுப்பள்ளியை திறந்து வைத்து அப்பள்ளியில் *அண்ணா விருது வழங்கி  சிறப்புரையாற்றுகிறார்.

மேலும் தமிழகம் முழுவதும்  ஆய்வு செய்துள்ள சிறந்த

 * எழுத்தாளர்கள்,

 * பேச்சாளர்கள்,

 * சிறந்த சமூக சேவகர்கள்,

*  சமூக ஆர்வலர்கள்

 மற்றும் அண்ணா தொடங்கிய இந்தப் பள்ளியில் படித்து தனித்துவமாக வாழ்வில் உயர்ந்த  நிலையில் இருக்கும் இந்த பள்ளியின் பழைய மாணவர்கள் உட்பட  200 பேருக்கு காஞ்சி முத்தமிழ்மையம் சார்பில்  அண்ணாவிருது வழங்கப்படவுள்ளது.


மாநில அளவிலான ஆய்வரங்கம்
******
மாபெரும் அண்ணா விருது வழங்கும்  விழாவை முன்னிட்டு  ஆய்வரங்கம் நடத்தவும் திட்டமிட்டுளோம். உங்களின் ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.அறிஞர் அண்ணா, தமிழ், காஞ்சிபுரம் பற்றிய  சிறந்த ஆய்வுக்கட்டுரைகள்  விழா மலரில் தங்களின்  புகைப்படத்துடன்   இடம்பெறும். தங்களின் ஆய்வுக்கட்டுரையை விழாவில் சமர்பிக்க வாய்ப்புகள் வழங்கப்படும்.

ஆய்வுக்கட்டுரை சமர்பிப்பவர்களுக்கு 'அண்ணா விருதும், சான்றிதழும் வழங்கப்படும்.


* ஆய்வுக்கட்டுரை சமர்பிக்க தங்கள் பெயரை பதிவு செய்ய உடனே முந்துங்கள்

* ஆய்வுக்கட்டுரையை  யார்வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம்.
 
* "A -4 " அளவுள்ள தாளில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் எழுத
  வேண்டும்.

* தலைப்புகள் மிக விரைவில் வெளியிடப்படும்.

அண்ணா திறந்த ஒரே பள்ளி இது என்பது குறிப்பிடத்தக்கது.

விழாநாள்: 15 .9. 2019
ஆய்வரங்கம்  : காலை 9 .30  மணி
நேரம்: மாலை 4 மணி

அன்புடன் அழைக்கும் ...
சூ.லாரன்ஸ்
நிறுவனர்-இயக்குநர்
#முத்தமிழ் மையம்
காஞ்சிபுரம்
7845667312

மேலும் விபரங்களுக்கு,
********************************
 9994219295

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One