காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்
06-08-2019
*இன்றைய திருக்குறள்*
*குறள்-13*
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
மு.வ உரை:
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.
கருணாநிதி உரை:
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.
✡✡✡✡✡✡✡✡
*பொன்மொழி*
தேவையான இடத்தில் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் வார்த்தையும் வாழ்க்கையும் அர்த்தமில்லாமல் ஆகி விடும்.
✳✳✳✳✳✳✳✳
*பழமொழி*
முப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருஷம் வீழ்ந்தவனும் இல்லை.
Sadness and gladness succeed each other.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
*Important Used Words*
Lioness பெண் சிங்கம்
Mare பெண் குதிரை
Mastiff காவல் நாய்
Mongoose கீரிப்பிள்ளை
Monkey குரங்கு
✍✍✍✍✍✍✍✍
1.தமிழ்நாட்டில் கரும்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் எது ?
கோயம்புத்தூர்
2. பட்டு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்திய மாநிலம் எது?
கர்நாடகா
🧬🧬🧬🧬🧬🧬🧬🧬
*Today's grammar*
Degree of Comparison
Adjectives change in form to show comparison,they are called Degree Of Comparison.
Type of Degree Of Comparison
Positive Degree Comparative Degree Superlative Degree
Example :
John is a tall boy.
John is taller than Ancy.
John is tallest of them all.
📫📫📫📫📫📫📫📫
*அறிவோம் தமிழ்*
*திணை*
திணை என்பது இலக்கணப் பாகுபாடு
தினை என்பது ஒருவகைத் தானியம்
திணை (சொல் பாகுபாடு)
1. உயர்திணை
2. அஃறிணை
🗣🗣🗣🗣🗣🗣🗣🗣
*இன்றைய கதை*
*புதிர் கதை*
ஒரு வரம் மூன்று பலன்கள்
ஒரு ஊரில் ஏழை மீனவன் ஒருவன் இருந்தான். அவனுடைய அம்மாவிற்குக் கண்பார்வை இல்லை. அவனுக்கு வெகு நாட்களாகக் குழந்தையும் இல்லை. ஒரு நாள் அவன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றான். அப்போது கரையில் ஒதுங்கிக் கிடந்த பெரிய மீனொன்று அவனைப் பார்த்துக் கெஞ்சியது. மீனவனே நான் சாதாரண மீன் இல்லை. கடலில் உள்ள மீன்களுக்கெல்லாம் தலைவன். ஆழ்கடலில் வசிக்கும் நான்இ ஒரு பெரிய அலையில் சிக்கி இந்தக் கரைப் பகுதிக்கு வந்துவிட்டேன். இப்போது நீந்த முடியாத அளவிற்கு மிகவும் சோர்வாக உள்ளேன். எனக்கு ஒரு உதவி செய் மீனவனே. என்னை பத்திரமாக ஆழ்கடலுக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால் உனக்கு ஒரு வரம் தருவேன்.
மீனவன் அந்த மீனைத் தூக்கி படகில் போட்டான். மிகவும் கஷ்டப்பட்டு படகைச் செலுத்திக் கொண்டுபோய் மீனை நடுக்கடலில் விட்டான். பிறகு என்ன வரம் கேட்பது என்று யோசித்தான். அவனால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. எனவே அவன் சொன்னான். மீன்களின் ராஜாவே நீ சொன்னபடி நான் செய்துவிட்டேன். ஆனால் என்ன வரம் கேட்பது என்று எனக்கு இப்போது தெரியவில்லை. வீட்டுக்குச் சென்று மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டு நாளை வந்து கேட்கிறேன். மீனும் நீ ஒரே ஒரு வரம்தான் கேட்க வேண்டும் என்று நினைவுபடுத்தி நன்றி கூறிச் சென்றது. மீனவன் வீட்டுக்குச் சென்றான். வீட்டில் பெற்றோரிடமும் மனைவியிடமும் நடந்ததைக் கூறினான். ராஜா மீனிடம் என்ன வரம் கேட்பது என்று ஆலோசித்தான்.
அவனது தந்தை கூறினார்: மகனே நாம் நெடுங்காலமாக இந்த ஓட்டைக் குடிசையில்தான் வாழ்ந்து வருகிறோம். நமக்கு ஒரு நல்ல வீடு வேண்டும் என்று ராஜா மீனிடம் கேளேன்.
அடுத்ததாக அவனது அம்மா சொன்னார்கள்: மகனே எனக்குக் கண் தெரியாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது. என் கண்கள் பார்வை பெற வேண்டும் என்று அந்த மீனிடம் கேள்.
கடைசியாக மனைவி கேட்டாள்: நமக்குத் திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் நமக்கு ஒரு குழந்தை இல்லை. எனவேஇ அந்த மீனிடம் நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று கேளுங்கள்.
மறுநாள் அந்த மீனவன் கடலுக்குச் சென்று ராஜா மீனிடம் ஒரே ஒரு வரம்தான் கேட்டான். அந்த ஒரு வரத்தில் அவன் பெற்றோரின் ஆசையும்இ அவன் மனைவின் விருப்பமும் நிறைவேறின. அப்படி அவன் என்ன வரம் கேட்டான்?
விடை:
என் மகன் கீழே விளையாடிக் கொண்டிருப்பதைஇ எங்கள் வீட்டு மாடியிலிருந்து என்
பார்த்து மகிழ வேண்டும் என்பது தான் அவன் கேட்ட வரம்.
🧾🧾🧾🧾🧾🧾🧾🧾
*செய்திச் சுருக்கம்*
🔮உரிய ஆலோசனைகள், ஆய்வுகளுக்குப் பிறகே சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியுள்ளோம்: நிர்மலா சீதாராமன்.
🔮காஷ்மீர் விவகாரத்தில் அடுத்தது என்ன? பாகிஸ்தான் நாடாளுமன்றம் நாளை அவசரமாக கூடுகிறது.
🔮கோவையில் கனமழை - பவானி ஆற்றங்கரையோரமாக வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தரவு.
🔮போலந்து ஓபன் மல்யுத்த போட்டியில் மகளிர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை வினேஷ் போகட்.
🔮வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி கண்டு தொடரையும் கைப்பற்றியது.
🔮 Article 370 is anti-women, anti-Dalit, anti-development, says Amit Shah.
🔮Army, Air Force on ‘very high alert’ after Article 370 is scrapped.
🔮New Zealand retire Daniel Vettori’s ODI jersey no.11.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
*தொகுப்பு*
T. தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
TN டிஜிட்டல் டீம்,
திருவள்ளூர் மாவட்டம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
No comments:
Post a Comment