சிவகாசி அரசு பள்ளி மாணவர்களின் விமான பயண ஆசை: தீர்த்து வைத்த தொண்டு நிறுவனங்கள். பொதுமக்கள் பாராட்டு.!
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சிவகாசி அரசு பள்ளி மாணவ - மாணவிகள், முதல்முறையாக விமானத்தில் சென்னை அழைத்து செல்லப்பட்டனா்.
விமானத்தில் பறக்க வேண்டும் என்ற அவர்களது நீண்ட நாள் ஆசையை தன்னார்வ தொண்டு நிறுவனங்களான ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்கில் இந்தியா ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து நிறைவேற்றியுள்ளனர்.
புதன்கிழமை சிவகாசியில் உள்ள தங்களது பள்ளியில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்ட இம்மாணவர்கள், காலை 6.30 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
அதன் பின்னர் மதுரை விமான நிலையத்தை சுற்றிப்பார்த்த மாணவர்கள், அங்கு புகைப்படம் எடுக்கவும் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் விமானம் ஏறிய மாணவர்கள், சுமார் 1.15 மணி நேர பயணத்திற்கு பின் சென்னை வந்தடைந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ரவுண்ட் டேபில் மற்றும் லேடீஸ் சர்கில் குழுவினரால் மாணவா்கள் அனைவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கிருந்து பேருந்து மூலம் ஈ.சி.ஆர் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பின்னர் மீதம் உள்ள நேரத்தை விஜிபி யுனிவர்சல் கிங்டம் பகுதியில் அம்மாணவர்கள் செலவழித்தனர்.
இது குறித்து மாணவா்கள் கருத்து தெரிவித்தபோது
எங்களை போன்ற ஏழை, எளிய அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவியா்களுக்கு விமான பயணம் என்பது எட்டாத உயரத்தில் இருந்து வருகிறது.
எங்களது நீண்ட நாள் கனவான விமானத்தில் பறக்கும் ஆசையினை தீர்த்து வைத்த ரவுண்ட் டேபிள் மற்றும் லேடீஸ் சர்கில் குழுவினருக்கு எங்கள் நன்றிகளை தெரியப்படுத்திக் கொள்கிறோம் என நெகிழ்ச்சியுடன் கூறினா்.
No comments:
Post a Comment