எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கல்விப் பணியோடு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புத்தகங்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வட்டாரக் கல்வி அலுவலர்

Thursday, September 5, 2019

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், கந்திலி ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் நல்லாசிரியர் திருமதி.சி.சித்ரா அவர்களால் கந்திலியில் ஆசிரியர் தின விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்விழாவிற்கு முன்னாள் N. S. S இயக்குனர் திரு.இரத்தின நடராசன் அவர்கள் "ஆசிரியர்களே சமுதாய சிற்பிகள்" எனும் தலைப்பில் ஆசிரியர்கள் கல்வி பணியில் சிறப்பாக செயல்பட உற்சாகமூட்டும் வகையில் வாழ்த்துரை வழங்கினார்.


தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்புக்காக குரும்பேரி தொடக்கப் பள்ளி மற்றும் இரகுபதியூர் நடுநிலைப் பள்ளிக்கும் புரவலர் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் கும்பிடிகாம்பட்டி தொடக்கப்பள்ளிக்கும் மற்றும் பள்ளத்தூர் நடுநிலைப் பள்ளிக் கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆசிரியர் தின விழாவில் அனைத்து ஆசிரியர்கட்கும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகளும் புத்தகங்களும் பரிசாக வழங்கி கந்திலி ஒன்றிய ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
வட்டாரக் கல்வி அலுவலரால் வட்டாரத் கல்வி அலுவலகம் மற்றும் கந்திலி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.


No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One