எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசு பள்ளியில் அப்துல் கலாமின் 88 வது பிறந்த தினம் கொண்டாட்டம்

Tuesday, October 15, 2019


அரசு பள்ளியில் அப்துல் கலாம் 88 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது        .  சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், கல்லேரிப்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்   இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரும், அணு விஞ்ஞானியும், இந்தியாவின் ஏவுகணையின் தந்தை எனவும் அழைக்கப்படும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 88வது பிறந்த தினம் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளியின் தலைமையாசிரியர் அமுதா  மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் அப்துல்கலாம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்  பின்னர் அவருடைய வாழ்க்கை வரலாறு பற்றியும் இளைஞர் எழுச்சி நாள் பற்றியும் பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஜோசப் ராஜ் அவர்கள்  மாணவர்களுக்கு கலாம்  அவர்கள் அரசுப்பள்ளியில் படித்து இந்தியாவின் உயரிய குடியரசுத்தலைவராக உயர்ந்தார் மேலும் அக்னிசிறகுகள்,இந்தியா2020 உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.  இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது என்று அடிக்கடி முழக்கம் விடுவார் இந்தியா 2020 ஆம் ஆண்டு நிச்சயமாக வல்லரசாக மாறும் என்று கூறிய டாக்டர் கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்று எங்கு சென்றாலும் இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் கூறிவந்தார்  இவ்வாறு ஆசிரியர் கூறினார்



.பிறகு மாணவர்கள் அவருடைய 88 வது பிறந்த தின நினைவாக 88 வடிவில் அமர்ந்து யோகாசனம் செய்தனர் இறுதியாக உலக கை கழுவும் தினம் கொண்டாடப்பட்டது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One