எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

இஸ்ரோ செல்லும் அரசு பள்ளி மாணவி- மாவட்ட கல்வி அலுவலர் பாராட்டு

Saturday, October 5, 2019


கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி, 'இஸ்ரோ' விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிடச் செல்கிறார்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி அரங்கப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஒன்பதாம் வகுப்பு மாணவி சபீதா, 15. இவர், 2018 - 19ம் ஆண்டுக்கான, 'இன்ஸ்பயர் மானக்' கண்காட்சியில், 'நதிகளை எளிமையாக எவ்வாறு இணைப்பது' என்ற தலைப்பில், செயல்முறை விளக்கம் வைத்திருந்தார். இதற்காக அவர், கேரளா மாநிலம், திருவனந்தபுரம், தும்பாவில் உள்ள, இஸ்ரோ விண்வெளி மையத்துக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டார்.

வரும், 7ம் தேதி, திருவனந்தபுரம் சென்று, 10ம் தேதி வரை, இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தை பார்வையிடுகிறார். நேற்று கரூரில் நடந்த வழியனுப்பு விழாவில், மாவட்ட கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன், சபீதாவுக்கு சால்வை அணிவித்து, பாராட்டு தெரிவித்தார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One