எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசு பள்ளி ஆசிரியர்கள், ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என, ஒருங்கிணைந்த கல்வி இயக்கமான, 'சமக்ர சிக் ஷா' துறை அதிகாரிகள் சுற்றறிக்கை

Tuesday, October 8, 2019




அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், 'ஸ்மார்ட் போன்' வைத்திருப்பது கட்டாயம் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் நிர்வாகம், பாடம் கற்பித்தல், பயிற்சி அளித்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும், டிஜிட்டல் தளத்துக்கு மாற்றப்படுகின்றன.மின்னணு ஆளுமையில், பள்ளி கல்வித் துறை முன்னோடியாக செயல்பட, பள்ளி கல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதன்படி, ஸ்மார்ட் போன் வாயிலாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவு;புத்தகங்களில் உள்ள பாடங்களை வீடியோவாக பயன்படுத்துதல் மற்றும் பாடம் தொடர்பான கூடுதல் தகவல்களை பதிவிறக்கம் செய்வது போன்ற திட்டங்களும், அமலுக்கு வந்துள்ளன.அதேபோல, மாணவர்களுக்கு நவீன கற்பித்தல் முறையை வழங்க,மத்திய அரசின் சார்பில், 'வீடியோ கான்பரன்ஸ்' மற்றும் மொபைல் போன் செயலிகள் வழியாக, சிறப்பு பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன.

இந்த பயிற்சிகளை மேற்கொள்ளவும், டிஜிட்டல் செயல்பாடுகளை அதிகரிக்கவும், அரசு பள்ளி ஆசிரியர்கள், ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என, ஒருங்கிணைந்த கல்வி இயக்கமான, 'சமக்ர சிக் ஷா' துறை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One