எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

நடுநிலைப் பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களும் -மணி கணேசன்

Wednesday, October 9, 2019




சிக்கல் 1 :

லேப்டாப் ஆன் செய்து , நெட் கனக்ட் செய்து வருகை பதிவு செய்ய தயாராவதற்கு குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் ஆகிறது. 8.40 க்கு யாராவது ஒருவர் இந்த பணியை செய்தால்தான் 9.10 க்குள் அனைவரும் வருகையைப் பதிவிட முடியும்!

சிக்கல் 2:

இன்டர்நெட் வசதி தனியாக வழங்கப்படாத நிலையில் ஆசிரியர்கள் தங்களுடைய இன்டர்நெட் பேக்கைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

சிக்கல் 3 :

குறிப்பிட்ட சர்விஸ் புரவைடரில் மட்டுமே ஒர்க் ஆகிறது. குறிப்பாக வோடபோன், ஏர்டெல், ஐடியா போன்றவை கிராமப்புறங்களில் ஸ்பீட் இன்டர்நெட் வசதியைத் தருவதில்லை.

சிக்கல் 4 :

 பேருந்து வசதியே இல்லாத கடைக்கோடி கிராமங்களில் ஆசிரியர்கள் 9 மணிக்குள் வருவது அவர்கள் கையில் இல்லை, குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே வரும் கிராமப் பேருந்து ஓட்டுனர்கள், ஷேர் ஆட்டோக்கள் இதனைத் தீர்மானிக்கின்றன.

சிக்கல் 5:

 சரியாக நெட்வொர்க் கிடைக்கும் செல்போன் வைத்துள்ள ஆசிரியர் விடுப்பு எடுத்தால் மற்ற ஆசிரியர்கள் தங்கள் வருகையைப் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. அந்த ஆசிரியர்கள் பள்ளிக்கு நேரத்திற்கு வந்தாலும் நெட்வொர்க் பிரச்சனையால் வருகையைப் பதிவு செய்ய இயலவில்லை என்றால் ABSENT அல்லது LATE ATTENDANCE ஆக கருத்தில் கொள்ளப்பட்டு ஆரஞ்ச் சோன், ரெட் சோன், மெமோ என மன உளைச்சல் ஏற்படுத்துகிறது.

சிக்கல் 6 :

 காலை நேரத்தில் மின்சாரம் இருக்க வேண்டும். மின் பிரச்சனை இருந்தால் லேப்டாப் சார்ஜ் செய்து வருகையைப் பதிவுசெய்ய மெனக்கெட வேண்டியுள்ளது...

குறிப்பு :

 பதிவு செய்யப்பட்ட கருவியில் (device) மட்டுமே இயங்கும், வேறு புது  கருவியில் இயங்காது.

சிக்கல் 7:

 EMIS - TEACHERS ATTENDANCE & STUDENTS ATTENDANCE , MID DAY MEAL SMS ,பள்ளி பதிவேட்டில் வருகை பதிவு செய்தல் என எத்தனை இடங்களில் வருகையைப் பதிவு செய்வது ?

சிக்கல் 8:

 திடீரென காய்ச்சல் , தலைவலி, வயிற்றுபோக்கு மற்றும் மாதவிடாய் பிரச்சினைகள் போன்றவற்றிற்கு அனுமதி எடுக்க வாய்ப்பில்லை.

இதுபோன்று ஆசிரியர்கட்கு இன்னல் தரக்கூடிய பயோ மெட்ரிக் வருகை பதிவின் நடைமுறை சிக்கலைத் தீர்க்க ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை தக்க நடவடிக்கை மேற்கொண்டு ஆசிரியர்கள் இன்னல்களைத் தீர்க்க முயல வேண்டும்!

-மணி கணேசன்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One