தங்கள் வீடுகளிலிருந்து அதிகப்படியான பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு வந்து கொடுக்கும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்புப் பரிசாக எலெக்ட்ரிக் சைக்கிளை வழங்கும் திட்டமும் உள்ளது.
திருப்பூர் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.
பிளாஸ்டிக் பொருள்களின் அன்றாட பயன்பாடு உலகம் முழுவதும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் அழிவின் விளிம்பில் சிக்கித் தவிக்கின்றன உயிரினங்களும் இயற்கையும். பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராகத் தன்னார்வ அமைப்புகளும் அரசும் தீவிரமாகக் குரல் கொடுத்து வருகின்றன. தமிழகத்திலும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.திரு
பிளாஸ்டிக்
சமூக ஆர்வலர்களின் குரல்களுக்கு வலுசேர்க்கும் வகையில், ஆந்திரா மாநிலம், அனந்தபூர் மாவட்ட ஆட்சியர் சத்யநாராயணன் எடுத்த ஒரு முடிவு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர், தனது நிர்வாகத்துக்குட்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரித்துக் கொண்டுவந்து கொடுத்தால், 1 கிலோ பிளாஸ்டிக் பொருள்களுக்கு 2 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என அறிவித்தார். இந்தத் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியுள்ளது.
No comments:
Post a Comment