எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.11.19

Saturday, November 30, 2019


திருக்குறள்


அதிகாரம்:நிலையாமை

திருக்குறள்:332

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.

விளக்கம்:

சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்.

பழமொழி

A good reputation is a fair estate.

நற்குணமே சிறந்த சொத்து.

இரண்டொழுக்க பண்புகள்

1. கடலையும் கடல் சார்ந்த பொருட்களையும் பாதுகாப்பேன்.

2. நெகிழி மற்றும் பிற குப்பைகளை கடலில் வீச மாட்டேன்.

பொன்மொழி

*  முடிந்தால் மற்றவர்களைக் காட்டிலும் அறிவாளியாய் இருங்கள்; ஆனால் அதை அவர்களிடம் சொல்லாதீர்கள்.  - செஸ்டர் பீல்டு

பொது அறிவு

1. நாணயத்தில் தமது உருவத்தை பொரித்த முதல் அரசர் யார்?

 அலெக்சாண்டர்.

2. ஈபிள் கோபுரத்தை கட்டியவர் யார்?

 அலெக்சாண்டர் கஸ்டேவ் ஈபிள் என்ற பொறியாளர்.

English words & meanings

Spongology – study of sponges. கடற்பஞ்சு குறித்த அறிவியல்.

Spontaneous - happening natural without any outside force. தானே இயங்குகின்ற

ஆரோக்ய வாழ்வு

 * அல்சர், குடலில் ஏற்படும் புண்களை ஆற்றும் ஆற்றல் பெற்றது கொய்யா பழம்

Some important  abbreviations for students

* UPSC - Union Public Service Commission

* URL - Uniform Resource Locator

நீதிக்கதை

வளைந்த நாணல்

ஒரு நாள் தென்றல் காற்று வீசியது. தோட்டத்திலுள்ள மரங்கள், புற்களையும், நாணலையும் பார்த்து, சிறு தென்றல் காற்று வீசியதற்கே பலமற்றுப் போய் அசைந்து கொடுக்கிறாயே? என்று ஏளனமாகப் பேசி சிரித்தன.

அடுத்தநாளே தோட்டத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. சூறைக்காற்று பலமாக வீசியதால் தோட்டத்தில் இருந்த மரங்கள் ஒவ்வொன்றாக முறிந்து விழுந்தன. அப்போது நாணல், மரங்களே! நீங்களும் என்னைப் போல் வளைந்து கொடுக்கப் பழகியிருந்தால் இப்படி வேரோடு சாய்ந்திருக்க மாட்டீர்கள்!

எங்களைப் பார்த்து ஏளனமாக கேலி பேசினீர்களே! நாங்களும் உபயோகமானவர்கள் தான். நாங்கள் ஆற்றுநீர் கரையை அரிக்காமல் தடுப்பதால்தான், நீங்களெல்லாம் கம்பீரமாக நிற்க முடிகிறது. இல்லையேல் கம்பீரமாக நிற்க முடியாது. அதேபோல் உருவத்தில் சிறியதாக இருக்கும் எறும்பு, தும்பிக்கைக்குள் நுழைந்து கடித்தால் உருவத்தில் பெரிய யானையாலும் வலியை தாங்கிக் கொள்ள முடியாது என்றது.

நாணல் பேசியதை கேட்டு மரங்களால் எதுவுமே பேச முடியவில்லை. அப்போதுதான் மரங்கள் உருவத்தில் சிறியதாக இருந்த நாணலைப் பார்த்து அலட்சியமாகப் பேசியது தவறு என்பதைப் புரிந்து கொண்டன.

நீதி :
ஒருவரையும் ஏளனமாகப் பேசக்கூடாது.

இன்றைய செய்திகள்

30.11.19

*  தியரி  மற்றும் பிராக்டிகல் கல்வி முறை ஆகிய இரண்டும் இணைந்தால் தமிழகம் கல்வியில் முதலிடம் பெறும் என்று பின்லாந்து கல்விக் குழு தெரிவித்துள்ளது.

* அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்தினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்- நுகர்வோர் அமைச்சகம் வெளியிட்டுள்ள இப்பரிந்துரைக்கு டிசம்பர் 20 ஆம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.

* வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் முகவர்களிடம் கொள்முதல் செய்யப்படும் பால் ரசாயன பரிசோதனை முறையை தீவிரமாக கடைபிடிக்க ஆவின் பால் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

* ஆசிய வில்வித்தை சாம்பியன் ஷிப்பில் இந்தியாவின் தீபிகா குமாரி தங்கப் பதக்கமும், அங்கிதா பகத் வெள்ளிப் பதக்கமும் வென்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர்.




* தெற்காசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய குத்துச் சண்டை அணியில் தமிழக வீராங்கனை கலைவாணி சீனிவாசனும் இடம் பெற்றுள்ளார்.

Today's Headlines

🌸 When Tamil Nadu schools combine theory along with the practicals ie application of the learnt part definitely Tamil Nadu will become number one in education.

 🌸 There will be fine up to Rs 5 lakhs for misuse of government symbols - term issued by the Ministry of Consumer Affairs. The public can comment on it until December 20th.

 🌸 The Aavin Milk Company has decided to adopt the severe Chemical Testing Procedure. Which will be available to agents from January 1.

 🌸 Deepika Kumari won gold medal at the Asian Archery Championships and Ankita Bhagat won silver medal. Thus by they got eligible for the Tokyo Olympics.

 🌸kalaivani Srinivasan has also been included in the team of the Indian boxing squad to participate in the South Asian Games .

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One