ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில், அனைத்து காலியிடங்களும் காட்டப்படுவதால், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் கவுன்சிலிங், ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும்.
இந்த கவுன்சிலிங்கில், ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட காலியிடங்களுக்கு மட்டும், பணியிட மாறுதல்வழங்கப்படும். இந்த ஆண்டு கவுன்சிலிங், சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடத்தப்படுகிறது. கவுன்சிலிங், நவம்பர், 11ல் துவங்கியது. தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோருக்கு, இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. நாளை மறுநாள் கவுன்சிலிங் முடியவுள்ளது.இந்நிலையில், கவுன்சிலிங் முழுமையும் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து இடங்களும், ஆசிரியர்களின் இடமாறுதலுக்கு காட்டப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெளிப்படை தன்மையுடன் கவுன்சிலிங் நடப்பதால், ஆசிரியர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.அதேநேரத்தில், இடங்கள் காலியாக இருந்தாலும், சில பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அங்குள்ள ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்படவில்லை என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment