எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளித் தலைமை ஆசிரியர்களின் வேண்டுகோளை முடித்திருத்துவோர் ஏற்பு !.

Friday, November 29, 2019




தூத்துக்குடி மாவட்டப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் வேண்டுகோளை முடித்திருத்துவோர் ஏற்பு !.

மாணவர்களுக்கு ஸ்டைலாக முடி வெட்ட வேண்டாம் ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்ற முடித்திருத்துவோர்
பள்ளி மாணவர்களுக்கு ஸ்டைலாக முடி வெட்ட வேண்டாம் என்ற நெல்லை தூத்துக்குடி மாவட்டப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று முடித்திருத்துவோர் சங்கம் பள்ளி மாணவர்களுக்கு ஸ்டைலாக மாடல் கட்டிங் வெட்டுவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.

சென்னையில் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் ஸ்டைலாக முடி வெட்டும் போக்கு உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் நடிகர்கள் விளையாட்டு விரர்களின் சிகை அலங்காரம் போல தாங்களும் முடி வெட்டிக் கொண்டு ஸ்டைலாக வலம் வருகின்றனர்.

சென்னையில் உள்ள இளைஞர்கள் தங்கள் அடையாளத்தை தனித்துவமாக காட்டுவதற்காக ஸ்டைலாக முடி வெட்டி விதவிதமாக சிகை அலங்காரம் செய்து கொள்வது என்பது பெரிய அளவில் பரவாலகி வருகிறது. அந்த வகையில் பாக்ஸ் கட்டிங், ஒன் சைட், வி கட், ஸ்பைக் என ஸ்டைலாக முடி வெட்டிக் கொள்ளும் இளைஞர்களை சென்னையில் புள்ளிங்கோ என்று கூறிகின்றனர். அதனாலேயே அதுபோன்ற ஸ்டைலான சிகை அலங்காரத்தை புள்ளிங்கோ ஹேர் ஸ்டைல் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த புள்ளிங்கோ சிகை அலங்காரம் சென்னையில் மட்டுமல்லாமல் சென்னைக்கு வெளியேயும் பரவலாகி வருகிறது. சென்னையில் மாடர்னாகப் பார்க்கப்படும் இந்த சிகை அலங்காரம் மற்ற மாவட்டங்களில் வினோதமாகவும் ஒழுங்கின்மையாகவும் பார்க்கப்படுகிறது. ஆனாலும், இது போன்ற ஹேர் ஸ்டைலுக்கும் மற்ற மாவட்டங்களில் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. அவர்களும் மாடர்னாக முடி வெட்டிக் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.

பள்ளி மாணவர்களின் இந்தப் போக்கு ஆசிரியர்கள் ஒழுங்கின்மையாகப் பார்ப்பதால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அப்பகுதியில் முடிவெட்டும் கடை வைத்திருப்பவர்களுக்கு பள்ளி மாணவர்கள் யாருக்கும் மாடலாக முடி வெட்டக் கூடாது என்று வேண்டுகோள் விண்ணப்பம் விடுத்தனர். இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி கவனம் பெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட முடித்திருத்துவோர் சங்கத்தினர் இனி பள்ளி மாணவர்களுக்கு மாடலாக முடி வெட்டுவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.

இது தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடித்திருத்துவோர் சங்கத்தினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டம், மருத்துவர் மற்றும் முடித்திருத்துவோர் சங்கம் (சிஐடியு) பேரவைக் கூட்டத்தில், கல்வித்துறையினரின் வேண்டுகோளை ஏற்று சமூகப் பொறுப்புடன் சங்கத்தின் உறுப்பினர்கள் தங்களது சலூன்களில் பள்ளிச் சிறுவர்களுக்கு மாடல் கட்டிங் வெட்டுவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One