எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 19.12.19

Thursday, December 19, 2019


திருக்குறள்


அதிகாரம்:துறவு

திருக்குறள்:347

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.

விளக்கம்:
பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன.

பழமொழி

Don't bargain for fish which is still in the water.

கைக்கு வராததைக் கணக்கு பார்க்காதே.

இரண்டொழுக்க பண்புகள்

1. புறங் கூறுதல் மாணவனாகிய எனக்கு தகுதி அல்ல எனவே புறங் கூற மாட்டேன்.

2. பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை இப்போது இருந்தே கடைபிடிக்க முயல்வேன்.

பொன்மொழி

உற்சாகமான உழைப்பு இல்லாமல் உயர்ந்த வெற்றி எதையும் பெற முடியாது.
----- எமர்சன்.

பொது அறிவு

* நோபல் பரிசு எத்தனை  துறைகளுக்கு வழங்கப்படுகிறது?

ஆறு  துறைகள். (இயற்பியல்,வேதியியல்,மருத்துவம்,          பொருளாதாரம்,அமைதி,இலக்கியம்)

* நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?

சர்.சி.வி. ராமன்.

English words & meanings

Insectology – study of insects. பூச்சியியல். பூச்சிகளை குறித்த படிப்பு மற்றும் அறிவியல்.

Identical -similar in every detail. ஒரே மாதிரியான அல்லது ஒரே தன்மையுள்ள.

ஆரோக்ய வாழ்வு

ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி,மிளகு மற்றும் சீரகம் சேர்த்து அரைத்து, தினமும் காலையில் சாப்பிட்டு வர ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.

Some important  abbreviations for students

at. no. - atomic number
at. wt. -  atomic weight

நீதிக்கதை

ஜோடிக் காக்கை
ஓர் ஊரில் பணக்காரன் ஒருவன் இருந்தான், அவன் ஒருநாள் தூங்கி எழுந்ததும் விடியற்காலையில் ஜோடியாக உள்ள காக்கைகளைக் கண்டால் அன்றைக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும் என்று கேள்விப்பட்டு அறிந்தான். தான் ஜோடிக் காக்கைகளைக் காலையில் எழுந்ததும் காண வேண்டும் என்ற எண்ணம் கொண்டான்.
அவ்வாறு எண்ணம் கொண்ட அப்பணக்காரன் தன் வேலைக்காரனை அழைத்து நீ விடியற்காலையில் ஜோடி காக்கைகளைப் பார்த்து வந்து என்னை எழுப்பு என்று கூறினான். அவ்வேலைக்காரன் மறுநாள் விடியற்காலையில் ஓர் இடத்தில் ஜோடிக் காக்கைகள் இருப்பதைப் பார்த்தான், உடனே ஓடிச் சென்று தன் எஜமானை எழுப்பினான்.


அப்பணக்காரன் படுக்கையிலிருந்து எழுந்து சென்று பார்க்கும் பொழுது அங்கே ஒரு காக்கை மட்டுமே இருந்தது. ஒரு காக்கையை மட்டும் பார்த்த பணக்காரன் கோபம் கொண்டு மற்றொரு காக்கை பறந்து செல்வதற்கு முன்னால் என்னை வந்து ஏன் எழுப்பவில்லை என்று சொல்லிக் கொண்டே வேலைக்காரனை அடித்தான். அப்போது அந்த வேலைக்காரன் எஜமானனே விடியற்காலையில் ஜோடிக் காக்கைகளைப் பார்த்தால் எனக்கு உண்டான அதிர்ஷ்டத்தைப் பார்த்தீர்களா? உங்களிடம் அடி வாங்கியதுதான் அதிர்ஷ்டம் என்று கூறினான். அதைக் கேட்ட பணக்காரன் ஆமாம் என்று சொல்லி அடிப்பதை நிறுத்திவிட்டான்.

வியாழன்
அறிவியல்

பூச்சிகளும் புதுமைகளும்:

1.) A ladybird might eat more than 5,000 insects in its lifetime. லேடிபர்ட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கரும்புள்ளி செவ்வண்டு தன் வாழ்நாளில் தீங்கு தரும் 5,000 பூச்சிகளை உண்டு அழிக்கும்.


2. ) A bee’s wings beat 190 times a second. ஒரு தேனீ ஒரு நொடியில் 190 முறை தன் இறக்கைகளை அடிக்கும்.

இன்றைய செய்திகள்
19.12.19

◆ஜிப்மரில் முதுநிலை மருத்துவத்துக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. டிசம்பர் 24-ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் நிலையில், ஜனவரி 1-ம் தேதி வகுப்புகள் தொடங்குகின்றன.

◆ *'சூல்'* நாவலுக்காக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு 2019-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

◆கடைகளில் வாங்கப்படும் நொறுக்குத் தீனி, துரித உணவுகளில் அபாயத்தை ஏற்படுத்தும் அளவில் உப்பு, கொழுப்பு ஆகியவை இருப்பதாக, மத்திய அரசு நிறுவனமான அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

◆நிர்பயா  வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 கைதிகளில் ஒருவரான அக்சய் குமார் தண்டனையை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

◆ 17 வயதுக்குட்பட்ட மூன்று நாடுகள் மகளிா் கால்பந்து போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றது.

◆ மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Today's Headlines

🌸 Entrance Examination result for Masters of Medicine in JIPMER has been released.  The classes begin on January 1, with the  counselling starting from December 24.

🌸Sahithya Academy award for the year 2019 was announced to S Dharman for his novel " sool".

🌸 Central government Organisation Science and Environmental Centre has warned that dangerous level of salt and fat, which is a risk factor is present in fast foods.

🌸 Highcourt dismissed the petition seeking review of the one of the 4 victims and affirmed the death sentence to Akshay Kumar,  in Nirbhaya case.

🌸22  killed in airstrikes in Idlib, Syria.  It is to be noted that many of those killed were children.

🌸 In the under 17 women football series India qualified for the finals.

🌸 India had a tremendous victory by 107 runs in the 2 nd one day match against West Indies.


Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One