எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வேறு பள்ளி ஆசிரியர்களே கண்காணிப்பாளராக நியமிக்கப்படுவார், டம்மி சீட்டுமுறையும் அமல்? 5 & 8 பொதுத்தேர்வில் புதிய தகவல்!!

Friday, January 31, 2020




நடப்பாண்டில் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வை அந்தந்த பள் வியிலேயே எழுதலாம் என்று அமைச்சர் தெரிவித்தாலும் , தேர்வுக்கு வேறு பள்ளி ஆசிரியர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படவுள்ளனர் .

மேலும் டம்மி ஷீட் ' கிழிக்கும் நடைமுறையும் அமல் படுத்தப்படுகிறது . தமிழகத்தில் 5 மற்றும் * 8ம் வகுப்பு மாணவர்கள் , நடப்பாண்டில் முப்பருவக் கல்வி முறையில் பயின்று வருகின்றனர் . இவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு என்பது கட்டாயமாகியுள்ளது . அதனால் , மூன்று பருவ பாடங்களையும் மொத்தமாக படிக்கவேண்டிய
கட்டாயத்துக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அறிவிப்பு வெளியான மறுநாளே , " மாணவர்கள் வேறு பள்ளிக்கு சென்று தேர்வு எழுதத் தேவையில்லை . அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு எழுதலாம் ' ' என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டை யன் கூறினர் . அடுத்ததாக , அதே பள்ளியில் தேர்வு எழுதினாலும் , தேர்வு அறை கண்காணிப் பாளராக வேறு பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது .

இதுகுறித்து பொதுத்தேர்வு பணிக்கான குழுவில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது : . தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்க ளுக்கு அரசு பொதுத்தேர்வு என்ற அறிவிப்பே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது . இந்நிலையில் , பொதுத் தேர்வு தொடர்பாக அடிக்கடி தொடக்கக்கல்வி இயக்குனரகம் ஒரு அறிவிப்பு வெளியிட அதற்கு அமைச்சர் விளக்கம் அளித்து வருகிறார் .

பத்தாம் வகுப்பு , பிளஸ் 2 பொதுத்தேர்வு போன்றே 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வையும் நட த்த அரசு திட்டமிட்டுள்ளது . குறிப்பாக , வேறு பள்ளிக்குச் சென்று மாணவர்கள் தேர்வு எழுதவேண்டாம் என்றாலும் , தேர்வு அறை கண்காணிப்பாளராக வேறு பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் . அதுவும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர்

ஒவ்வொரு தேர்வுக்கும் ஆசிரியர்கள் மாறுவார்கள் . மேலும் , மாணவர்களுக்கு தரப்படும் விடைத்தாளின் முதல் பக்கம் ' டம்மி ஷீட் ' எனப்படும் . அதில் மாணவரின் பெயர் , சீரியல் எண் உள்ளிட்ட விவரங்கள் எழுதவேண்டும் . தேர்வு எழுதி முடித்ததும் , முதல் பக்கமான டம்மி ஷீட்டை தேர்வு அறை கண்காணிப் பாளர் கிழித்து எடுத்துக் கொண்டு , விடைத்தாளை திருத்துவதற்காக அனுப்பி வைப்பார் .

ஏனெனில் , சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியரே குறிப்பிட்ட மாண வரின் விடைத்தாளை திருத்தினாலும் , அது யாருடையது என்பது அவருக்கு தெரியாது . இந்த நடைமுறை , 10 மற்றும் பிளஸ் ' 2 பொதுத்தேர்வுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது . இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர் .

2 comments

  1. ஏன்டா , இதெல்லெல்லாம் ரொம்ப ஓவரா தெரியல.....

    ReplyDelete
  2. கல்வியில் முன்னேற்றம் வேண்டும்.
    ஆனால்,10 வயது 5-ம் வகுப்பு சின்னஞ்சிறு சிறார்களுக்கு ஏன் இந்த சோதனை.
    இதுதான் ரொம்ப வேதனை.
    பின்லாந்தை பின்பற்ற எண்ணி,
    பின்னுக்கு போய்,பின் மண்டை
    சூடேர போகுது.😭😭

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One