எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

சாதிச் சான்றிதழ் கேட்கவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்!!

Tuesday, January 14, 2020




5 & 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எழுத சாதிச்சான்றிதழ் கேட்கவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி முன்னர் வந்த செய்தி...

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத ஜாதி சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி எட்டாம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' என்ற அனைவருக்கும் தேர்ச்சி திட்டம் பின்பற்றப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களின் கற்றல் திறன் குறைந்ததாக மத்திய அரசின் ஆய்வு குழு கண்டறிந்தது.இதையடுத்து ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு களுக்கு பொதுவான ஆண்டு இறுதி தேர்வை நடத்த மத்திய அரசு பரிந்துரைத்தது. இதை பின்பற்றி ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு மாநில அளவில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.நடப்பு கல்வி ஆண்டில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.இதுகுறித்து அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் விபரங்களை திரட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த விண்ணப்பத்தில் மாணவர்களின் பெயர் முகவரி பெற்றோர் விபரம் உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் கேட்கப் பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பள்ளி என ஒவ்வொரு மாணவரின் ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் பிறப்பு சான்றிதழும் கட்டாயம் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாணவர்களின் முன்னேறிய பிரிவினர் இருந்தால் அவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வேண்டாம் என விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One