எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசுப்பள்ளி மாணவனுக்கு மூன்று கண்.? அதிசய மாணவனால் அசந்துபோன ஆசிரியர்கள்.!

Sunday, January 26, 2020




சிவனுக்கு மூன்றாவது நெற்றிக்கண் இருப்பதை புராண கதைகளில் நாம் படித்திருப்போம். ஆனால் பள்ளி மாணவனுக்கு மூன்றாவதாக கண்ணாக அறிவுக்கண் இருப்பதை பார்த்து அனைவர்க்கும் அதிர்ச்சியான ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த கிருஷ்ணரைாயபுரம் அருகே கோவக்குளம் கிராமத்தை ஜெயபால் இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மகன் தண்டாபணி பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.



தண்டாபணி பழைய ஜெயங்கொண்டம் பகுதியில் பயிற்சி வகுப்புகள் நடத்தி வரும் வேல்முருகன் என்பவரிடம் பயிற்சி வகுப்பு சேர்ந்துள்ளேன்.

வேல்முருகனின் தனிப்பயிற்சி சென்று கொண்டிருந்த தண்டபாணி தனக்கு மூன்றாவதாக கண் இருப்பதை அறிந்து கொண்டுள்ளான். மாணவன் தண்டாபணியின் பள்ளி ஆசிரியர்களிடம் இதை பற்றி சொல்லும் போது அவர்கள் அனைவரும் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் பார்த்திருக்கிறார்கள்.

இதையடுத்து, தண்டபாணியை சோதித்து பார்த்த அவரது பள்ளி ஆசிரியர்கள் கண்களை கட்டிவிட்டு தண்டாபணியின் முன் ஒவ்வொருத்தராக நிறுத்தி இவர் யார் என்று ஒவ்வொருவரையும் கேட்டிருக்கிறார்கள். அதற்கு தண்டபாணியே கண் திறந்து பார்ப்பதை போன்று மிகச்சரியா சொல்லி பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளான்.

இதே போலவே கண்களை கட்டிக்கொண்டு புத்தகத்தில் உள்ள எழுத்துக்கள், ரூபாய் நோட்டுகளில் உள்ள வரிசை எண்கள், விசிட்டிங் கார்டில் உள்ள எழுத்துகள், சொல்போன்களில் உள்ள புகைப்படங்கள், என அனைத்தையும் கண்களை கட்டிக்கொண்டு நேரில் பார்ப்பதை போல பார்த்து சொல்ல மாணவன் தண்டபாணியை நெற்றிக்கண் தண்டாபணி என சொல்ல ஆரம்பித்துள்ளனர்.



நெற்றிக்கண் தண்டாபணி குறித்து பயிற்சியாளர் வேல்முருகன் கூறியதாவது, முறையான பயிற்சி எடுத்தால் படிப்பில் ஆர்வம் பிறக்கும், நல்ல எண்ணம், நல்ல ஒழுக்கம்,வளர்ந்து இது போன்ற நெற்றிக்கண் அதிசயங்கள் நடக்க சாத்தியம் உள்ள என்றார்.

தண்டாபணியின் இரு கண்களை கட்டியும் தமது நெற்றிக்கண் என்னும் அறிவுக்கண்களில் பார்த்து சொல்லும் தண்டபாணி ஒரு அதிசய பிறவி என அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One