எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஆசிரியர் எண்ணிக்கை... மத்திய அரசுக்கு தமிழக அரசு தந்த தகவல்...? தொடக்கப்பள்ளிகளில் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்

Tuesday, February 11, 2020




மாணவர் ஆசிரியர் விகிதாச்சார எண்ணிக்கையை மத்திய அரசுக்கு தமிழக அரசு தவறான தகவல் அளித்துள்ளது, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

3 ஆண்டுகளாக தமிழகத்தில் பின்பற்றுப்பட்டு வரும் ஆசிரியர் மாணவர் விகிதாசாரம்  ஒரு பார்வை:

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 30மாணவருக்கு 1 ஆசிரியரும்,  நடுநிலைப் பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு 1 பட்டதாரி ஆசிரியரும், 9 ,10 ,11, 12-ம் வகுப்புகளில்  40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் கடந்த 3 ஆண்டுகளாக நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இதனடிப்படையில்  தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாணவர்கள், எண்ணிக்கை அடிப்படையில் சுமார் 17,000 ஆசிரியர்கள் உபரியாக உள்ளதாக தமிழக அரசு  கூறுகிறது.

ஆனால் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு அளித்துள்ள தகவலில் தமிழகத்தில் பின்பற்றப்படும் ஆசிரியர் மாணவர்கள் விகிதாசாரம் முற்றிலும் முரணாக அமைந்துள்ளது.

2017-18-ம் கல்வியாண்டில் ஆசிரியர் மாணவர்களின் விகிதசாரம் தொடர்பாக தமிழக அரசின் புள்ளிவிவரம் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையில்  18 மாணவர்களுக்கும். ஒரு ஆசிரியரும் 10-ம் வகுப்பு வரை  ஒரு  24 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும்12 ம் வகுப்பு வரையில்  ஒரு ஆசிரியர் 20 மாணவர்களுக்கு பாடம் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அதே போன்று  2018-19 ம் கல்வியாண்டில் தமிழக அரசு மத்திய அரசுக்கு அளித்துள்ள  ஆசிரியர் மாணவர்கள்  விகிதசார புள்ளிவிவரத்தில் தொடக்கப்பள்ளிகளில்  ஒரு ஆசிரியர் 20 மாணவர்களுக்கும், நடுநிலைப் பள்ளிகளில்  ஒரு ஆசிரியர் 18 மாணவர்களுக்கும் 10-ம் வகுப்பு வரை ஒரு ஆசிரியர் 15 மாணவர்களுக்கும், 12-ம் வகுப்பு வரையில ஒரு ஆசிரியர் 30 மாணவர்களுக்கு பாடம் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு அளித்துள்ள புள்ளி விவர அடிப்படையில் மாணவர்கள் ஆசிரியர்கள் விகிதங்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை சரியாக  கடைப்பிடித்தால் உபரி ஆசிரியர்கள் பணியிடம்  என்பதே தமிழகத்தில் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள்  இடைநிற்றல் தொடர்பாக தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்த புள்ளி விவரங்களுக்கும் மத்திய அரசு வெளியிட்ட  புள்ளி விவரங்களுக்கும் அதிக அளவில் வேறுபாடு இருந்தது.

தற்போது ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் புள்ளி விவரங்களளிலும்  தமிழக அரசு தவறான புள்ளி விவரங்களை மத்திய அரசுக்கு அளித்துள்ளது தெரிய வந்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One