எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கட்டுரைப் போட்டியில் வென்று விமானத்தில் பயணிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்

Thursday, February 13, 2020





முதல் முறையாக நமது கோனேரிக்குப்பம் ஊ.ஒ.ந.நி பள்ளி மாணவர்கள் வெ.ஹர்ஷித் -7ஆம் வகுப்பு, ஏ.தியா -7 ஆம் வகுப்பு, ஆகிய  இருவரும், இன்று 13.02.2020   விமானத்தில் செல்லும் வாய்ப்யை  *அகரம் அறக்கட்டளை * வழங்கியுள்ளது. மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் பொருட்டு,  தமிழகத்தில் 25 அரசுப்பள்ளிகளில் நடைபெற்ற, விமானத்தில் செல்ல வாய்ப்பு கிடைத்தால் எவ்வாறு உணர்வாய்?   யாருடன் செல்ல ஆசைப்படுகிறாய்? ஏன் ஆவருடன் செல்ல விரும்புகிறாய்?
என்ற தலைப்பில் நடத்தப்பட்ட
கட்டுரை போட்டியில் , கோனேரிக்குப்பம் பள்ளி  6 முதல் 8 ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் மட்டும் கலந்துகொண்டனர். அதில்  சிறந்த கட்டுரை எழுதிய 2 மாணவர்களை மட்டும் தேர்வு செய்து, இன்று 13.02.2020  சென்னை விமான நிலையத்தில் இருந்து வானில் பறக்கும் முதல் வாய்ப்பை பெற்றுள்ளனர். மேலும் வெற்றி பெற்ற மாணவர்களோடு  திருமதி.R.பொன்னாச்சி ஆசிரியை அவர்களும், மாணவர்களோடு இணைந்து பயணிக்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. மாணவர்களின்  இந்த வெற்றியானது, எங்கள் பள்ளி மாணவர்கள் அனைவரின் இதயத்தில் தன்னம்பிக்கையை விதைத்துள்ளது.

என்றும்
நம்பிக்கையுடன்
கோனேரிக்குப்பம்
ஊ.ஒ.ந.நி.பள்ளி.
ஒலக்கூர் ஒன்றியம்,
திண்டிவனம் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம்.

நடிகர் திரு.சூர்யா அவர்கள் நடித்து தற்போது வெளியாகிட உள்ள சூரரைப்போற்று திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று 13/02/2020 சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் Spicejet விமானத்தில் வானில் நடத்திட உள்ளனர்.

எளியோருக்கும் விமானப் பயணத்தினை சாத்தியமாக்கிடும் வகையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் 2D இந்நிகழ்வில் பங்கேற்க தமிழகத்தின்  சில அரசுப் பள்ளிகளில் கட்டுரைப் போட்டியினை நடத்தியது. அக்கட்டுரைப்போட்டியில் வெற்றிபெற்ற 50 குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என 100 பேரை இந்நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பு வழங்கியது.

இதில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேலராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் 8 ஆம் வகுப்பு மாணவர் தீபக் & 7 ஆம் வகுப்பு மாணவி புவனேஸ்வரி இருவரும் பெற்றோரும் பங்கேற்கின்றனர். என்பதனை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

இந்த வாய்ப்பினை வழங்கிய 2D நிறுவனம், போட்டிகளை நடத்தி ஒருங்கிணைக்கும் அகரம் அறக்கட்டளை,  Spicejet விமான நிறுவனம் , நடிகர். சூர்யா - அனைவருக்கும் நன்றி.

செ.மணிமாறன்
பட்டதாரி ஆசிரியர்
ஊ.ஒ.ந.நி.பள்ளி.
மேலராதாநல்லூர்
திருவாரூர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One