எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மாணவர் சேர்க்கையை ஏப்ரலில்தான் நடத்த வேண்டும்: அமைச்சர் உத்தரவு

Wednesday, February 12, 2020




பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் உடல் நலத்தை பேணுதல் தொடர்பாக ஒருநாள் கருத்தரங்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று காலை தொடங்கியது. இந்த நிகழ்வில், உடல் நலம் தொடர்பான குறுந்தகடுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டு பேசியதாவது:

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு  நன்கொடை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை என்பது ஏப்ரல் மாதத்தில்தான் நடத்த வேண்டும்.

அதற்கு முன்னதாக விளம்பரத் தட்டிகள் வைத்து மாணவர்கள் சேர்க்கை நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் டியூஷன் மையங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. முறையான அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே டியூஷன் சென்டர்கள் நடத்த வேண்டும். மத்திய அரசு வெளியிட்டுள்ள மாணவர்கள் இடைநிற்றல் குறித்த புள்ளி விவரங்களை, தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One