எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசு பள்ளியில் உலக மகளிர் தின கொண்டாட்டம்

Monday, March 9, 2020


அரசு பள்ளியில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது      சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம்,கல்லேரிப்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக பெண்கள் கொண்டாடப்பட்டது.   ஆசிரியர் ஜோசப்ராஜ் தலைமை ஆசிரியை,ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு எழுதுகோல் வழங்கி பெண்கள் தின வாழ்த்துகள் தெரிவித்து பின்வருமாறு பேசினார். ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த தினம்.
 பெண்களுக்கான சமத்துவம் உரிமைகளை வலியுறுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது.1920 ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.
இதையடுத்து 1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா.சபை பிரகடனப்படுத்தியது.மேலும் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வந்த பெண்களின் வாழ்க்கை வரலாறு குறித்தும் மாணவர்களுக்கு கூறினார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One