எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தேர்வுகள் நடைபெறுமா? என்பது குறித்து இன்றே கல்வித்துறை தெளிவுபடுத்த வேண்டும்! மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு!

Saturday, March 21, 2020




தேர்வை ரத்து செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி நியாயமான விலையில் விற்க வேண்டும். கூடுதல் விலையில் கிடைக்கக் கூடாது என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது.


தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பள்ளி மாணவர்களின் தேர்வை ரத்து செய்வது தொடர்பான எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று வாதிட்டார். இது அனைத்தும் தொடர்பான விரிவான தாக்கல் செய்ய அறிக்கையை மார்ச் 23ம் தேதி சமர்ப்பிக்க வேண்டுமென்று வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

திடீரென தேர்வுகள் ரத்து ஊன வதந்திகள் பரவுவதால் மாணவர்கள் உளவியல் ரீதியாக தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் எழுகிறது. எனவே அத்தகைய குழப்பங்களுக்கு இடமளிக்காமல் கல்வித்துறை இன்றைய தினமே தேர்வு குறித்த தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் ஊன மாணவர்களும், பெற்றோரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One