எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தினம் ஒரு புத்தகம் - வீடில்லாப்புத்தகங்கள்

Monday, March 30, 2020




ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்

வெளியீடு : தி இந்து

பக்கங்கள் : 192

 விலை : ரூ.200

              நமது குழுவில் உள்ள அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் இது.... வாசிப்பை நேசிக்கும் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது.... எஸ்.ரா அவர்களின் புத்தகங்களை இதற்கு முன்பு நான் வாசித்ததில்லை...ஹப்பா... வியக்கிறேன் என்ன ஒரு எழுத்து நடை... புத்தகத்தை கீழே வைக்கவே மனது வரவில்லை....
         
                   ஆசிரியர் வாசித்த புத்தகங்களின் அறிமுக நூல் இது.....  இந்நூலில் 57 கட்டுரைகள் உள்ளன.... ஒவ்வொரு கட்டுரையும் குறைந்தபட்சம் இரண்டு நூல்களையாவது நமக்கு அறிமுகம் செய்கின்றது..... ஒவ்வொரு புத்தகமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை அல்ல.... புதுப் புது புத்தகங்கள் புது புது அறிமுகங்கள்...

               ஆசிரியருக்கு   புத்தகத்தின் மீது உள்ள மோகமும் அதைப் பெறுவதற்கு எவ்வாறெல்லாம் அலைந்து திரிந்து இருக்கிறார் என்பதை காணும் பொழுது வியப்பாகவே உள்ளது... பொருளாதார சூழ்நிலையின் காரணமாக பெரும்பாலும்  பழைய புத்தகங்களையே விலைக்கு வாங்குகிறார்....  சாலையோர கடைகள்... மலிவு விலை கடைகள் என ஒவ்வொரு ஊரிலும் எங்கு எப்பொழுது புத்தகங்கள் விற்கும் என்பதை ஆசிரியர் மிக அழகாக கூறியுள்ளார் ... இந்நூலில் உள்ள புத்தகங்கள் அனைத்தும் பெரும்பாலும் மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகவே இருந்தன ....

                நூல் முழுவதும் அட....அப்படியா... அட்டகாசம் .....என சிந்திக்கும் வைக்கும் தகவல்கள் நிறைய உள்ளது.  இந்நூலில் அனைத்து துறைகளைப் பற்றிய விவரங்களும் மிக அழகாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்... சில எடுத்துக்காட்டுகளை குறிப்பிடலாம் என்று நினைத்தேன் ஆனால் 57 கட்டுரைகளிலும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகவே உள்ளன எதை விடுவது எதை சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை....

                ஒன்றே ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்.... ஆசிரியர் மிகுந்த வருத்தத்துடன் சொல்லி இருப்பார்.... ஒருவரை மலையேற வைப்பது கூட சுலபம் ஆனால் வாசிக்க வைப்பது மிக கடினமாக உள்ளது... இலக்கிய போட்டி.... பேச்சுப்போட்டி... நாடகப்போட்டி வைப்பது போல் ஏன் வாசிக்கும் போட்டி வைக்க கூடாது.... இளைஞர்களை வாசிக்க வைக்க கூடாது என ஆதங்கத்துடன் கூறி இருப்பார்..... ஆசிரியர் இக்குழுவை பார்த்தால் மிகுந்த சந்தோஷப்படுவார்.... ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாத 10000 பேர்.... முகத்தை கூட பார்த்ததில்லை.... ஆனால் அனைவருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை.... வாசிப்பை நேசிக்கின்றோம்.... வாசிப்பில் சிறிதும் தொய்வு ஏற்படகூடாது என போட்டிகளை அறிவித்தும்.... பரிசுகளை வழங்கியும் உற்சாக படுத்தும் குழுவின் அட்மின்கள்.... இப்படி ஆரோக்கியமான குழு இதுவரை யாரும் கண்டிருக்க வாய்ப்பில்லை....இக்குழு வாசிப்பை அடுத்த தலைமுறைக்கு நிச்சயம்  கொண்டு செல்லும்..... 30 நாள் வாசிப்பு போட்டியில் எஸ்.ரா அவர்கள் அறிமுகப்படுத்தும் 57 நூல்களின் அறிமுக நூலுக்கே அறிமுகம் எழுதுவேன் என நினைத்து பார்க்கவில்லை.... நன்றி இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த குழுவிற்கு....

                  புத்தகத்தின் பெயர் அதை எங்கு வாங்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.... நமக்கு விருப்பமானவர்களுக்கு எந்தத் துறை பிடிக்கும் என்று தெரிந்தால் அந்த துறையில் எந்த புத்தகம் சிறந்த புத்தகம் என தேர்ந்தெடுத்து பரிசு அளிப்பதற்கு இந்த நூல் உதவியாக இருக்கும்.....

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One