எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

சமூக விலகலை கடைபிடித்து காய்கறி வாங்கிய வெளிநாட்டினைச் சேர்ந்த தன்னார்வலர் புதுக்கோட்டை மாவட்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டு..

Wednesday, April 15, 2020





ஜெர்மனி நாட்டைச்சேர்ந்த முனைவர் ஈவோ என்பவர் இலுப்பூரில் செயல்பட்டுவரும்  எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில்  சமூகவியல் மற்றும் வேளாண் மையில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்று அந்நிறுவனத்திலேயே தன்னார்வலராக பணிபுரிந்து வருகிறார் இவர் புதன்கிழமை காலை 7.30 மணியளவில் இலுப்பூர் பேருந்து நிலைய காய்பறி சந்தைக்கு வருகைதந்து சமூக இடைவெளியினை பின்பற்றி காய்கறி வாங்கியதோடு அங்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்களிடம் சமூகவிலகலை பின்பற்ற வலியுறுத்தினார்.பின்னர்  அங்கு சமூக விலகலை பின்பற்ற வலியுறுத்தும் தன்னார்வலர்களாக பணிபுரிந்த இலுப்பூர் கல்வி மாவட்டப்பள்ளித்துணை ஆய்வாளர் திரு கி.வேலுச்சாமி,ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் இந்து மேல்நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திரு மகேந்திரன் மற்றும்  தன்னார்வலர்களையும் பாராட்டியதோடு பொதுமக்கள் சமூக இடைவெளியினை பின்பற்ற சிறந்த முறையில் ஏற்பாடு செய்துள்ள காவல்துறை உள்ளிட்ட மத்திய,மாநில அரசு நிர்வாகத்தினரையும் பாராட்டிச்சென்றார்..

1 comment

  1. *அனைவருக்கும் வணக்கம்*

    *15/04/2020*

    *கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வெளியில் நடமாட முடியாமலும் வேலைக்குச்செல்ல முடியாமலும் உள்ளனர்.இந்நிலையில் தான் பணிபுரியும்பள்ளியின் எல்லைக்குட்பட்ட இருளர்காலனியில் வசிக்கும் ஏழைக்குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கி பசியாற்றியுள்ளார் ஒரு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்.*

    *திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்துக்குட்பட்ட VKR புரம் கிராம ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக B.S.பூங்கோதை என்பவர் பணியாற்றுகிறார்.இவர் தன்னிடம் படிக்கும் மாணவர்களின் குடும்பங்கள் பசியோடு வாடக்கூடாது என நினைத்து இருளர் காலனியில் வசிக்கும் அந்த மாணவர்களின் குடும்பங்கள் அருகில்* *உள்ள குடும்பங்கள் என 45 குடும்பங்களுக்கு அரிசி பருப்பு புளி உப்பு மிளகாய்த்தூள்* *மாசாலாத்தூள் கடுகு உளுத்தம்பருப்பு சமையல்* *எண்ணை சோப்பு பிஸ்கட் என ஒரு குடும்பத்துக்கு 500 ரூபாய்* *மதிப்புள்ள மளிகை சாமான்களை 45 குடும்பங்களுக்கு சுமார் 20,000க்கும்மேல் தன் சொந்த செலவில் வழங்கியுள்ளார்.*
    *இவரது இந்தப் பணியை அனைவரும் வாழ்த்தி பாராட்டியுள்ளனர்.*

    *இந்த நிவாரணத்தை வழங்க வருவாய் கோட்டாட்சியரின் அனுமதியைப் பெற்று வருவாய்த்துறையினர் மூலமாக தன்னார்வலர்களை வைத்து சமூக இடைவெளியைப் பின்பற்றி நிவாரண பொருட்களை வழங்கி அனைவருக்கும் முன்னுதாரனமாய் சமூக பணியை மேற்கொண்டுள்ளார்*

    *தன் சொந்த செலவில் ஏழை இருளர் குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கிய திருத்தணி வட்டார VKR புரம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி B.S.பூங்கோதை அவர்களை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்*

    *B.S.பூங்கோதை அவர்கள் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசரியர் கூட்டணியின் திருவள்ளூர்மாவட்ட பொருளாளராகவும் திருத்தணி வட்டார செயலாளராகவும் இருந்து வருகிறார்*

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One