எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசு ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய அவசரச் சட்டம் பிறப்பித்தது கேரள அரசு

Wednesday, April 29, 2020




கேரள மாநிலத்தில் கரோனா பாதிப்பைச் சமாளிக்கும் வகையில் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மாதந்தோறும் 6 நாள் ஊதியம், 5 மாதங்கள் பிடிக்கப்படும் என்று பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த ஏதுவாக மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது.

கரோனா வைரஸால் கேரள மாநிலம் அடைந்த பாதிப்பைச் சரிசெய்ய போதுமான நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசு சமீபத்தில் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது.

இதன்படி ‘‘கேரள மாநிலத்தில் மாதம் ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவாக ஊதியம் வாங்குவோருக்கு 6 நாட்கள் ஊதியம் அடுத்த 5 மாதங்களுக்குப் பிடிக்கப்படாது. மாநில அரசு நிறுவனங்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு, தனியார் கூட்டு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றுவோருக்கு மட்டும் பிடிக்கப்படும்.




மேலும், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், வாரிய உறுப்பினர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள், ஆணையங்களில் இருப்போர் ஆகியோரின் ஊதியம் 30 சதவீதம் பிடிக்கப்படும் எனத் தெரிவித்தது. அதேசமயம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை ஏற்கெனவே அளித்தவர்களுக்கு இது பொருந்தாது’’ எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து கேரள நீர் ஆணையப் பணியாளர் அமைப்பு, காங்கிரஸின் ஐஎன்டியுசி, கேரள வித்யூதி மஸ்தூர் சங்கம் ஆகியவை இணைந்து கேரள உயர் நீதிமன்றத்தில் கேரள அரசின் ஊதியப் பிடித்தம் உத்தரவுக்கு எதிராகத் மனுத்தாக்கல் செய்தது. ஊழியர்களின் ஊதியத்தை வலுக்கட்டாயமாக எடுத்துக்கொள்ள அரசுக்கு உரிமையில்லை, ஊதியத்தைப் பிடித்தம் செய்யும் உத்தரவு தவறானது எனத் தெரிவித்திருந்தனர்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி குரியன் தாமஸ் அமர்வு இந்த உத்தரவை அடுத்த இரு மாதங்களுக்கு செயல்படுத்தத் தடை விதிதித்து உத்தரவு பிறப்பித்தது.




இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் நிறுத்த ஏதுவாக ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு தொகையை பிடித்தம் செய்வதற்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ‘‘பேரிடரின் போது அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 25 சதவீதம் அளவுக்கு ஒத்திவைக்க புதிதாக பிறப்பிக்கப்பட உள்ள அவசர சட்டம் வழிவகுக்கும்.

ஒத்திவைக்கப்பட்ட சம்பள தொகையை, மீண்டும் எப்போது அளிக்கலாம் என்று 6 மாதத்திற்குள் அரசு முடிவு எடுத்துக்கொள்ளலாம். ஏற்கெனவே அறிவித்தபடி 6 நாட்கள் சம்பளம் மட்டுமே அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். இதுபோன்ற நடவடிக்கைக்கு சட்டம் இல்லை என உயர் நீதிமன்றம் கூறியதால், சட்டப்பூர்வமாக்கும் வகையில் அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து விரைவில் மேல் முறையீடு செய்வோம்” என்றார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One