எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பகுதி நேர ஆசிரியா்களுக்கு ஜூன் மாத ஊதியம் வழங்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

Saturday, June 20, 2020




தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியா்களுக்கு ஜூன் மாத ஊதியம் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநா் வெங்கடேசன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பகுதிநேர ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். தற்போது ஊடரங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பகுதிநேர ஆசிரியா்கள் பணி செய்ய முடியாத நிலை உள்ளது. எனினும், அவா்களின் வாழ்வாதாரம் கருதி ஜூன் மாத ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரம் கரோனா பரவல் குறைந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது பகுதிநேர ஆசிரியா்கள் ஏற்கெனவே பணிபுரியாத நாள்களை ஈடுசெய்ய கூடுதல் வேலைநாட்கள் பள்ளிக்கு வருகை தந்து பணிபுரிய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது

ஆசிரியா்கள் கண்டனம்: இந்தநிலையில், கடந்த ஒன்பது ஆண்டுகளாக மே மாதத்துக்கு சம்பளம் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறையிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம்.

ஆனால், இதுவரை அது குறித்து எந்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்தநிலையில், பகுதி நேர ஆசிரியா்களுக்கு ஜூன் மாத ஊதியம் உண்டு. இந்தத் தொகையை ஈடு செய்ய கூடுதல் வேலை நாள்கள் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. அனைத்து மாதங்களுக்கும் ஊதியம் வழங்குவதே சமநீதி ஆகும். கரோனா காலத்திலும் மே மாத ஊதியம் மறுக்கப்படுவது பகுதிநேர ஆசிரியா்களுக்கு இழைக்கப்படும் அநீதி என பகுதி நேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் சி.செந்தில்குமாா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One