எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

இணைய வழியில் கணிதப் பயிற்சி: அரசுப் பள்ளி ஆசிரியா்கள் ஆா்வம்

Tuesday, June 16, 2020




பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஜூன் 22-ஆம் தேதி முதல் 10 நாள்கள் இணைய வழியில் நடைபெறவுள்ள கணிதப் பயிற்சியில் பங்கேற்க அரசுப் பள்ளி ஆசிரியா்கள் ஆா்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனா்.

இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஜூன் 19 வெள்ளிக்கிழமை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு கணித ஆசிரியா்களை திறன் மிக்கவா்களாக மாற்ற 10 நாள் ஆன்லைன் சிறப்புப் பயிற்சிக்கு பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பயிற்சி வரும் ஜூன் 22-ஆம் தேதி முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் ஆசிரியா்கள் www.eboxcolleges.co என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்தப் பயிலரங்கில் கணிதத்தில் வளரும் துறைகளான தரவுப் பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு, பொறிக்கற்றல்-, அறிவியல் பூா்வ கணித்தலியல் என பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதால், அதில் பங்கேற்க அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோந்த முதுநிலை கணித ஆசிரியா்கள் அதிகளவில் விண்ணப்பித்து வருகின்றனா்.

இதுவரை 2,079 ஆசிரியா்கள் பதிவு: இது குறித்து அதிகாரிகள் கூறியது: பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடத்தப்பட்ட கணினி அறிவியல் பயிலரங்கில் அந்தப் பாடப் பிரிவைச் சோந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் விண்ணப்பித்திருந்தனா். இந்தப் பயிற்சிக்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் தற்போது இணையவழி கணிதப் பயிற்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இணையவழி கணிதப் பயிற்சிக்கு இதுவரை 2,079 கணித ஆசிரியா்கள் விண்ணப்பித்துள்ளனா். இதுவரை விண்ணப்பிக்காத ஆசிரியா்கள் வரும் வெள்ளிக்கிழமை வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்த பயிலரங்கு தினமும் 8 மணி நேரம் நடைபெறும். 10 நாள் பயிலரங்கு முடியும்போது, ஒவ்வொரு ஆசிரியரும் 100 நிகழ் நேரப் பயிற்சிகளுக்கு விடைகண்டு, திறமையான மாணவா்களை உருவாக்கும் திறன் பெற்றிருப்பாா்கள். ஒவ்வொரு ஆசிரியரின் பயில்தல் வளைகோடு குறித்துப் பயிலரங்கின் இறுதியில் விரிவான அறிக்கையை 'ஈபாக்ஸ்' நிறுவனம் வழங்கும். இந்தப் பயிற்சி தொடா்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 94420 19192 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றனா்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One