எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

குரூப் 2ஏ தேர்வு: சான்றிதழ் பதிவேற்ற நாளை மறுநாள் கடைசி

Wednesday, May 2, 2018

குரூப் 2ஏ தேர்வுக்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வரும் வெள்ளிக்கிழமை (மே 4) கடைசி நாளாகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வரலாற்றில் முதன் முறையாக சான்றிதழ் சரிபார்ப்புப் பணியானது ஆன்-லைனில் முறையில் நடைபெறுகிறது.

இதற்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வரும் வெள்ளிக்கிழமை கடைசியாகும். ஆன்-லைன் வழியாக சான்றிதழ் சரிபார்க்கும் புதிய நடைமுறை குரூப் 2ஏ தேர்வில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்காக சான்றிதழ் பதிவேற்றும் பணிகள் கடந்த 23-ஆம் தேதியில் இருந்து தொடங்கின.

இந்நிலையில், சான்றிதழ் பதிவேற்றம் வரும் வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது. அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் அரசு இணைய சேவை மையங்கள் மூலமாக தேர்வர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து வந்தனர்.

இதற்காக ஒரு சான்றிதழ் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One