எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகள் நாளை ஆர்ப்பாட்டம்

Wednesday, January 30, 2019




அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவாக  மாவட்டத் தலைநகரங்களில் வியாழக்கிழமை (ஜன.31) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், சிபிஐ (எம்-எல்) செயலாளர் எஸ். குமாரசாமி, எஸ்.யு.சி.ஐ.(சி) செயலாளர் ஏ. ரெங்கசாமி ஆகியோர் கூட்டாக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:  9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை அழைத்துப் பேச தமிழக அரசு மறுத்து வருவது அநீதியானது. போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை நடவடிக்கைளை அரசு எடுத்து வருகிறது. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்வதோடு, அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளையும் திரும்பப் பெறவேண்டும். மேலும் அவர்களை அழைத்துப் பேச வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் இடதுசாரி கட்சிகள் சார்பில் வருகிற வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One